புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2013

100 அடி கல்குவாரி பள்ளத்தில் லாரி கலிழ்ந்தது :லாரி மற்றும் டிரைவரை மீட்க முடியாமல் தவிப்பு
          நெல்லை மாவட்டம் கரிவலம்வந்தநல்லூரை அடுத்த ராஜபாளையம் மெயின் சாலையில் அருகன்குளம் புதூர் கிராமத்தில் முரளி ராஜா என்பவருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கு கல்குவாரி உள்ளது. அதில் 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்ப்பதோடு 50 க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் சுண்ணாம்புக் கல்லோடு கொண்டு செல்லும் பணியும் நடந்து வருகிறது.

          இதனிடையே நேற்று மாலை 100 மீட்டர் ஆழத்திலிருந்து கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று மேலே வந்த போது பழுதாகி நின்றது லாரியை இயக்கும் பொருட்டு தொழிலாளர்கள் லாரியைப் பின் நோக்கித் தள்ள, எதிர்பாராதவிதமாக டிப்பர் லாரி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

 இதில் லாரி டிரைவர் துரை முருகன் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் மூழ்கிய பள்ளத்தில் 50 அடி ஆழம் தண்ணீர் நிரம்பியிருப்பதால் லாரி கவிழ்ந்த இடம் தெரியவில்லை. தகவலறிந்த சங்கரன்கோவில் டி.எஸ்.பி.மாதவன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் கொண்ட போலீஸ் டீம் ஸ்பாட்டிற்கு விரைந்தது சங்கரன்கோவில் தீயணைப்பு படைவீரர்கள் லாரியையும், டிரைவரையும் மீட்கப் போராடி வருகின்றனர் தண்ணீரின் ஆழம் அதிக மிருப்பதால் மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டதோடு கூடுதலாக பெரிய கிரைன்கள் கொண்டுவரப்பட்டு மீட்பு பணி விரைவு படுத்தப்பட்டுள்ளது.
           பலியான டிரைவர் துரை முருகனுக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர் இரவு முழுவதும் முடியாம பகலிலும் மீட்பு பணி தொடர்வதால் சம்பவ இடத்தில் கிராம மக்களின் கூட்டம் பதை பதைப் போடு காணப்படுகிறது.

ad

ad