புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2013

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் : ஜெயலலிதாவுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
வன்முறையாளர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் சமமாகப் பார்ப்பதா? என்று தமிழக அரசுக்கு விடுத லைச் சிறுத்தைகள் கேள்வி எழுப்பியுள்ளது.

இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘’விழுப்புரம் மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் போன்ற அரசியல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து அம்மாவட்ட ஆட்சி நிர்வாகம் ஆணை பிறப்பித்துள்ளது.  அண்மையில் மரக்காணத்திலும் கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் நடைபெற்ற வன்முறைகளைத் தொடர்ந்து சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டு வதற்காக இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
 இன்று (17-5-2013) விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சியிலும் இன்னும் ஓரிரு இடங்களிலும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு நான் ஒப்புதல் அளித்திருந்த நிலையிலும், சமூக அமைதி மற்றும் சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டும் வன்முறையாளர்களின் சீண்டலுக்கு துளியும் இடம்கொடுத்துவிடக் கூடாது என்கிற அடிப்படையிலும் அந்நிகழ்வுகளில் கலந்துகொள்ளாமல் தவிர்த் துள்ளேன்.
 அரங்கங்களில் நடைபெறும் திருமணம், காதணி விழா போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு 144 தடையாணை எந்த வகையிலும் பொருந்தாது என்றாலும் நல்லெண்ணத்தின் அடிப்படையில், அரங்குகளில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்கவில்லை.  ஆனால், அரங்கங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் நான் பங்கேற்கக் கூடாது என, விழுப்புரம் மாவட்டத்தில் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஏற்கனவே தருமபுரி வன்முறையைத் தொடர்ந்து அந்த மாவட்டத்திலும் தடையாணை பிறப்பிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திப்பதற்கும் அவர்களுக்கு ஆடைகள், பாத்திரங்கள் போன்ற பொருளுதவிகளைச் செய்வதற்கும் காவல்துறை இதுவரை எனக்கு அனுமதி வழங்கவில்லை. 
 25 இலட்சம் ரூபாய் மதிப்பில் புத்தாடைகள், உணவுப்பொருட்கள் மற்றும் பிற தட்டுமுட்டுச் சாமான்கள் என வாங்கிவைத்து பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுநாள் வரையில் எங்களால் வழங்கிட இயலவில்லை. 
வன்முறை செய்பவர்களையும் வன்முறையால் பாதிக்கப்படுகிறவர்களையும் சட்டம்-ஒழுங்கு என்னும் பெயரில் சமமாக நடத்தும் அரசின் அணுகுமுறை மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக உள்ளது.  குறிப்பிட்ட எந்தவொரு சமூகத்திற்கும் எதிராகவோ அல்லது கட்சி, சங்கம் போன்ற அமைப்புகளுக்கு எதிராகவோ விடுதலைச் சிறுத்தைகள் வெறுப்புப் பிரச்சாரத்தைச் செய்திருக்கிறோமா?  வன்முறைகளைத் தூண்டும்படியோ, சட்டம்-ஒழுங்குக்கு சவால் விடுக்கும் வகையிலோ, அரசின் இறையாண்மையைக் கேள்விககுள்ளாக்கும் வகையிலோ என்றாவது, எங்காவது விடுதலைச் சிறுதைகள் பேசியிருக்கிறோமா? செயல்பட்டிருக்கிறோமா?  எத்தனைப் பாதிப்புகள் நேர்ந்தாலும் உயிர்ச்சேதங்கள் நிகழ்ந்தாலும் சட்டத்தையும் அரசையும் மதித்து ஆட்சியாளர்களிடம் முறையிடுவதையே நடைமுறையாகக் கொண்டி ருக்கிற தலித் சமூகத்தையும் விடுதலைச் சிறுத்தைகளையும் வன்முறை சக்திகளோடு இணைத்  துப் பார்ப்பதும், இணையாகப் பார்ப்பதும் வேதனைக்குரியதாக உள்ளது.
 அமைதியாகவும் கட்டுப்பாடாகவும் அரசின் மீது நம்பிக்கை வைத்தும் செயல்பட்டுக்கொண்டிருக்கிற தலித் மக்களையும் விடுதலைச் சிறுத்தைகளையும் இதன்மூலம் பொதுமக்களிடையே வன்முறையாளர்களாகச் சித்தரிக்கும் நிலையே உள்ளது.
 சட்டம்-ஒழுங்கையும் சமூக அமைதியையும் ஒரு பொருட்டாக மதிக்காத வன்முறை கும்பலுக்கு அஞ்சி, தலித் மக்களுக்கும் விடுதலைச் சிறுத்தைகளுக்கும் உரிய சனநாயக உரிமைகளை மறுப்பது ஏற்புடை யதல்ல. 
ஆகவே, தமிழக அரசு சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகளுக்கான சனநாயகத்தை நசுக்கும் போக்கைக் கைவிட வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கும் அவர்களுக்காகக் குரல் கொடுப்பதற்கும் ஏற்ற வகையில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிராக விதிக்கப்பட்டிருக்கிற தடையாணைகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். 
மேலும், வன்முறைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் காண்பதும் அவர்களைக் கட்டுப்படுத்துவதன் மூலம் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதும்தான் அரசின் சரியான அணுகுமுறையாக இருக்க முடியும் என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறது. 
வடமாவட்டங்களில் சாதியவாதிகளால் தூண்டப்படும் வன்முறைகள் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், சமூக அமைதியைக் காப்பதற்கும், நல்லிணக்கத்தைப் பேணுவதற்கும் வழிவகுத்திட தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

ad

ad