புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மே, 2013

பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கைக்கு அழைப்பில்லை
பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைப்பின் நிகழ்வுக்கு இலங்கை நாட்டுக்கு அழைப்பு விடுக்கக் கூடாதென கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
முதலாம் உலகப் போர் தொடர்பான நினைவு நிகழ்வுகள் பிரித்தானியாவின் கிலாஸ்கோவில் நடைபெற்றபோதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமை நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மனித உரிமை அமைப்புக்களும் சில எதிர்க்கட்சிகளும் தெரிவித்துள்ளன.
எனினும், இந்தக் கோரிக்கையை பிரித்தானிய அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யுத்த பாதிப்பு குறித்த சர்வதேச நிகழ்வொன்றில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கையை அழைப்பதா என ஸ்கொட்லாந்துக்கான சர்வதேச மன்னிப்புச் சபை திட்டப் பணிப்பாளர் மார்க் பெவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் இடம்பெறும் பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என பிரித்தானிய மகாராணி அறிவித்ததை அடுத்து பிரித்தானியா சார்பில் எவரும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாதென வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ad

ad