புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2013

ஐ.நா. மனித உரிமைப் பேரவை23 ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பம்: இலங்கை குறித்து எதுவும் கூறாத நவநீதம் பிள்ளை

ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு தலைமை வகிக்கும் போலந்து நாட்டின் ஜெனிவாவுக்கான தூதுவர் ரெமிஜியஸ் ஏ. ஹென்ஸ் தலைமையில் ஆரம்பமாகவுள்ள பேரவையின் 23 ஆவது
கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.
எனினும் தனது பிரதான ஆரம்ப உரையில் இலங்கை நிலைவரம் குறித்து நவநீதம் பிள்ளை எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. மாறாக சிரியாவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளின் அவதானத்துக்கு கொண்டுவந்தார்.
சிரியாவின் விவகாரத்தில் சர்வதேச சமூகம் தோல்வியடைந்துள்ளதாகவும் அந்த நாட்டின் நிலைமை குறித்து விரைந்து கவனமெடுப்பது அவசியம் என்றும் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மியன்மாரில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளை தடுத்த நிறுத்த மியன்மார் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஜூன் மாதம் 14 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இந்த 23 ஆவது கூட்டத் தொடரின் அமர்வுகளின்போது நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதுடன் பல்வேறு நாடுகள் தொடர்பில் பிரேரணைகளும் முன்வைக்கப்படவுள்ளன.
குறிப்பாக 21 விசேட அறிக்கையாளர்கள் பல்வேறு நாடுகளின் மனித உரிமை நிலைவரங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர். 50 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்த இந்த அமர்வுகளின்போது ஆராயப்படவுள்ளதுடன் 40 விசேட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.
இதனிடையே மனித உரிமை விவகாரங்கள் குறித்து சுமார் 100 அறிக்கைகள் மனித உரிமைப் பேரவையின் அமர்வின்போது சமர்ப்பிக்கப்படவுள்ளன. 47 உறுப்பு நாடுகள் இந்தக் கூட்டத் தொடரில் கலந்துகொள்ளவுள்ளதுடன் மேலும் பல நாடுகளும் அவதானிப்பு நாடுகளாகவும் பங்குபற்றவுள்ளன.
இதேவேளை ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடருக்கு இலங்கையின் சார்பில் அமைச்சர்கள் மட்டத்தில் எவரும் இம்முறை கலந்துகொள்ளவில்லை. மாறாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து மட்டும் உயர் அதிகாரி ஒருவர் கலந்துகொள்கின்றார்.
மேலும் ஜெனிவாவில் உள்ள இலங்கை வதிவிட பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான தூதரக அதிகாரிகளும் இந்த கூட்டத் தொடரில் இலங்கையின் சார்பில் கலந்துகொள்கின்றனர்.
இதேவேளை மனித உரிமைப் பேரவையின் 23 ஆவது கூட்டத் தொடரின்போது இலங்கை குறித்து எந்த விடயமும் ஆராயப்படமாட்டாது என்றும் எனவே அமைச்சர்கள் மட்டக் குழு இம்முறை ஜெனிவாவுக்கு பயணமாகாது என்றும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
ஒருவேளை 23 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஏதாவது கேள்விகள் எழுப்பப்படின் அவற்றுக்கு இலங்கை சார்பில் ஜெனிவா தூதரகத்திலிருந்து கலந்துகொள்ளும் அதிகாரிகள் பதிலளிப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad