புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மே, 2013

தடுப்பில் உள்ள புலி உறுப்பினா்களின் பெயர்களை வெளியிட தயார்! ஐநாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் தெரிவிப்பு
இறுதிப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டு தடுப்பில் வைத்துள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் பெயர் விபரங்களை வெளியிட தயார் என ஐ.நாவுக்கான இலங்கைப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.  
அதேவேளை, இலங்கைப் புலனாய்வுத் துறையினர் இறுதிக் கட்டப் போரின் போது சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட புலிகள் தொடர்பாக 3ஆயிரத்து 200 முறைப்பாடுகளை அவர்களுடைய உறவினர்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.
இதில் 2 ஆயிரத்து 729 முறைப்பாடுகளே முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் ஆரியசிங்க கூறினார்.
முறையாகப் பதிவு செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து 101 முறைப்பாடுகள் தொடர்பாகத் தாம் இதுவரை விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், விசாரணை முடிவடைந்து தடுப்புக் காவலிலுள்ள புலிகளின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் புலிகள் இயக்கத்தின் ஏனைய உறுப்பினர்களின் விவரங்களை வெளியிடத் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ad

ad