21 ஜூன், 2013

விசேட மாநாடு! கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் பேர்லின் பயணம்
பேர்லினில் விசேட மாநாடொன்று நாளை 22ம் திகதியும் நாளை மறுதினம் 23ம் திகதியும் இடம்பெறஉள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்களும், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சிவில் அமைப்புக்களின் உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகிய மூவரும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று பேர்லின் பயணமாகின்றனர்.
இதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செ. கஜேந்திரன் ஆகியோரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
இதனைவிட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டிற்காக பேர்லின் செல்கின்றனர்.
கடந்த வருடமும் பேர்லினில் இத்தகைய மாநாடு இடம்பெற்றிருந்தது.
அதன் தொடர்ச்சியாகவே இந்த மாநாடு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் உறுப்பினர்கள் இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் வெவ்வேறு தலையங்கங்களில் கருத்துரை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.