புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூன், 2013

இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவினால் படைக்கப்பட்ட தமிழ் திரைப்படமான “இனி அவன்” எதிர்வரும் ஜூலை மாதம் 10 ம் திகதிமுதல் பிரென்சு  உபதலைப்புக்களுடன் பிரான்சில் வெளியாகவுள்ளது.
முற்றுமுழுதாக யாழ்ப்பாணத்தில் உருவாகிய இப்படம் 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையில் வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாது உலகலாவிய ரீதியில்
தனது அறிமுகத்தினை கான்ஸ் திரைப்பட விழாவில்(2012) மேற்கொண்டது. அதுமட்டுமல்லாது ரொறன்ரோ சர்வதேச திரைப்படவிழா டோக்கியோ சர்வதேச திரைப்படவிழா, எடின்பரோ சர்வதேச திரைப்படவிழா டுபாய்  சர்வதேச திரைப்படவிழா போன்ற உலகப்புகழ்பெற்ற திரைப்பட விழாக்கள் உட்பட 25க்கும் மேற்பட்ட திரைப்படவிழாக்களில் திரையிடப்பட்டு சர்வதேச ரீதியாக பாராட்டுக்களை இந்த திரைப்படம் பெற்றுக்கொண்டமைகுறிப்பிடத்தக்கது.

பிரான்ஸில் திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுவரும்  héros du film நிறுவனம் இனி அவன் திரைப்படத்தினை பிரான்ஸ் திரையரங்குகளில் வெளியிடுகின்றது.
இத்திரைப்படத்தில் இலங்கை நடிகர்களான தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், கிங் ரட்ணம், மஹேஸ்வரி ரட்ணம், தைரியநாதன் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். உதவி இயக்குனர்களாக வதீஸ் வருணன் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரும் ஒளிப்பதிவாளராக சண்ண தேசப்பிரியவும் பணியாற்றியிருக்கிறார்கள். 

ad

ad