புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2013

சம்பந்தன் தலைமையில் தமிழ் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை புதுடில்லி பயணம்
இந்திய அரசின் அவசர அழைப்பின் பேரிலேயே இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆறு பேர் அடங்கிய குழு நாளை ஞாயிற்றுக்கிழமை புதுடில்லி செல்லவுள்ளது.
இந்தக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், பொன்.செல்வராசா ஆகியோர் இடம்பெறவுள்ளனர்.
இவர்களை புதுடில்லியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித், நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சந்தித்துப் பேசவுள்ளனர்.
குறிப்பாக, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தைப் பலவீனப்படுத்தும் இலங்கை அரசின் முயற்சிகள் குறித்தே இந்தச் சந்திப்புகளில் முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேவேளை. புதுடில்லியின் முக்கிய அதிகாரிகள், மற்றும் இராஜதந்திரிகளுடனும், 13வது திருத்தத்தை பலவீனப்படுத்தும் இலங்கை அரசின் முயற்சிகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தைப் பலவீனப்படுத்தும் 19வது அரசியலமைப்புத் திருத்த சட்டமூலத்தை வரும் 18ம் நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த அவசர சந்திப்பு இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ad

ad