புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூன், 2013

அதிமுகவில் 8 போட காத்திருக்கும் தேமுதிக எம்.எல்.ஏ. 
மதுரை திருப்பரங்குன்றம் தேமுதிக எம்.எல்.ஏ ஏ.கே.பி.ராஜா.  இவர் சமீப காலமாக தேமுதிக தலைமை யிடம் தொடர்பில் இல்லாமல் ஒதுங்கியே இருக்கும் ராஜா
, தற்போது மதுரை மேயர் ராஜன் செல்லப்பா மூலம்  அதிமுகவை ஆதரிக்கும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.


ஓரிரு நாளில் தொகுதி வளர்ச்சி பட்டியலுடன் அதிமுக பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தி க்க இருப்பதாக தெரிகிறது.


தேமுதிகவிலிருந்து ஏற்கனவே 7 எம்.எல்.ஏக்கள் அதிமுக பக்கம் வந்திருக்கிறார்கள்.   இதில், அதிமுகவில் 8 போட காத்திருக்கிறார் ஏ.கே.பி.ராஜா என்று கூறப்படுகிறது.
தென்மாவட்ட தேமுதிக எம்.எல்.ஏ.க்களை கூண்டோடு அதிமுகவுக்கு கொண்டுவருவதாக ஓ.பி.எஸ். மற்றும் ராஜன் செல்லப்பா ஆகியோர் கட்சி தலைமையிடம் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. 

ad

ad