புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2013

வவுனியா தவசிக்குளத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் லண்டனில் இனந்தெரியாதோரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படிப்பை தொடர்வதற்காக 32 வயதுடைய குணராசா மயூரதி என்ற பெண் கடந்த 2010ம் ஆண்டு லண்டன் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த 6ம் திகதி கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உயிரிழந்த பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்று அங்கு தங்குவதற்கான விசா அனுமதி பெற்ற நிலையில் அங்குள்ள அடுக்குமாடித் தொடரில் வசித்த வந்த நிலையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக அப் பெண்ணின் தந்தையான செ.குணராசா தெரிவித்தார்.
உயிரிழந்த பெண் ஒரு குழந்தைக்கு தாயார் என அப் பெண்ணின் தந்தை குறிப்பிட்டார்.
தற்போது சடலம் லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் வைக்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸ் தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த பெண்ணின் தந்தை மேலும் தெரிவித்தார்.
லண்டனில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர பெற்றோர் முயற்சி
லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த குணராசா மயூரதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற் கான முயற்சிகளை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.
7 வயதுடைய பெண் பிள்ளையொன்றின் தாயான கு.மயூரதி மேற்படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த 2010 ம் ஆண்டு லண்டனுக்கு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றிருந்த நிலையில் தனியான வீடொன்றில் வசித்து வந்திருந்தார்.
இந் நிலையில் கடந்த 6 ம் திகதி இவரது வீட்டில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட நிலையில் லண்டன் பொலிஸார் மூலம் தகவல் இவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மயூரதியின் பெற்றோர் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சினை நாடியுள்ளனர்.

ad

ad