-

14 ஆக., 2013


கனடா பஸ் விபத்தில் காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி பலி 
News Service
கனடா, ஸ்காபரோவில் Middlefield & Steeles Ave சந்திப்பில் நேற்றையதினம் 13/08/2013 காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கோர விபத்தில் மனோரஞ்சனா கனகசபாபதி எனும் யாழ்-காரைநகரைச் சேர்ந்த ஈழத்தமிழ் யுவதி கொல்லப்பட்டுள்ளார். இவ் பஸ் விபத்தின் போது 23 பேர் பஸ்ஸில் பயணம் செய்ததாகவும் 13 பேர் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும், இதில் 4 ஈழத்தமிழர்கள் காயமடைந்தாகவும் அறியப்படுகிறது.
காயமடைந்த பஸ் சாரதியை பொலிஸார் தொடர்ந்து விசாரித்து வருவதாகவும், விபத்து நடந்த போது சாரதி கைத் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விபத்தில் கொல்லப்பட்ட மனோரஞ்சனா கனகசபாபதியின் இறுதிச்சடங்குகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad