புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013

ஜெனீவாவில் அரசுக்கு ஆதரவு தேடிய முஸ்லிம் தலைவர்களுக்கு கிராண்ட்பாஸ் தாக்குதலை மதவாதிகள் ரம்ழான் பரிசாக தந்துள்ளார்கள்!- மனோ
ஐநாவில் நவநீதம்பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டித் தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ழான் பரிசுதான், கிராண்ட்பாஸ் பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
தெரிவித்துள்ளார்.
கிராண்ட்பாஸ் இஸ்லாமிய பள்ளிவாசலின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக கருத்து கூறிய மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
ஜெனீவா மனித உரிமை பிரேரணைகள் இலங்கை நாட்டுக்கு எதிரானவை அல்ல. அவை இலங்கை அரசுக்கு எதிரானவை என நாம் திரும்ப, திரும்ப கூறினோம். அதை கேட்காமல் இந்த அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இந்நாட்டு முஸ்லிம் அரசியல்வாதிகள் முன்னின்றார்கள்.
இவர்கள் இதன்மூலம் இந்த நாட்டை காப்பாற்றவில்லை.மாறாக இந்த அரசாங்கத்தை பின்னின்று இயக்கும் மதவாதிகளையே இவர்கள் பாதுகாத்துள்ளார்கள். இது இன்று மிகத்தெளிவாக புலனாகியுள்ளது.
இந்நாட்டு முஸ்லிம் தலைவர்கள் பாதுகாத்த மதவாதிகளே, இன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களை தாக்கி அழிக்கின்றார்கள். நேற்று, கிராண்ட்பாஸ் பள்ளிவாசலை தாக்கி தாக்கியழித்து, இவர்கள் இந்நாட்டு முஸ்லிம்களுக்கு ரம்ழான் பரிசளித்துள்ளார்கள்.
இனவாதத்தை முன்னிறுத்தி தமிழர்களை கொன்றழித்த இந்த அரசாங்கம், இன்று மதவாதத்தை பயன்படுத்தி முஸ்லிம் மக்களை அழிப்பதை முஸ்லிம் மக்கள் உணர்ந்துள்ளார்கள். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் உணர்ந்துள்ளார்களா என்பதுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.
நான் உண்மையை கூறுகின்றேன். முஸ்லிம் மக்களுக்கு தலைமை தாங்க நான் நினைக்கவில்லை. கொழும்பிலும், கண்டியிலும், நுவரெலியாவிலும் எனது கட்சிக்கு முஸ்லிம் மக்கள் வாக்களிப்பார்கள் என நான் நம்பவில்லை.
அப்படியான ஒரு எதிர்பார்ப்பில் இதை நான் கூறவில்லை. ஆனால் இந்நாட்டில் முஸ்லிம் தலைமைத்துவம் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு நேர்மையான தலைமைத்துவம் தர வேண்டும் என நான் விரும்புகின்றேன்.
ஏனென்றால் அப்பாவி முஸ்லிம் சகோதரர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என நான் மனப்பூர்வமாகவே நினைக்கின்றேன்.
தங்களது அமைச்சர் பதவி வரப்பிரசாதங்களுக்காக இந்த நாட்டில் பெரும்பான்மை இன, மத வாதங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் வளர்த்துவிடக்கூடாது என நான் கண்டிப்பாக எதிர்பார்க்கின்றேன்.

ad

ad