புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2013



தலைவா பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து
சொல்லவில்லை : நடிகர் தனுஷ் விளக்கம்
 

விஜய் நடித்த தலைவா திரைப்படம் பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வெளியாகவில்லை.  மற்ற மாநிலங்களில் மற்றும் வெளிநாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் திரையிடப்படவில்லை என கோவையைச்சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இந்தப்படத்திற்கு தொடர்ந்து தடை விதித்தால் இனி தமிழ்ப்படங்களில் நடிக்க மாட் டேன் என்று விஜய் சொன்னதாக வேறு இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில்,  ‘’ தலைவா படத்திற்கு நிகழ்ந்த பிரச்சனை நியாயமற்றது.  ஒரு படத்திற்கு தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
தனுஷின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் சூடு கிளப்பியுள்ளது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில் தான் கூறிய கருத்து தனுஷ் விளக்கம் அளித்துள்ளார்.
அவர்,  ‘’தலைவா பட பிரச்சனையில் அரசுக்கு எதிராக நான் கருத்து எதுவும் சொல்லவில்லை.  ஒரு நடிக னாக,  ரசிகனாக திரைப்படம் குறித்துதான் என கருத்தை தெரிவித்திருக்கிறேன்’’என்று தெரிவித்துள் ளார்.

ad

ad