இளைய மகள் அக்ஷராவை கதாநாயகியாக களமிறக்கும் கமல்
இந்த நேரத்தில் தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் உலக நாயகன்.
தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் ஸ்ருதி பிஸியாகி விட்டார். லேட்டஸ்ட்டாக இந்தி ரீமேக்கான ரமணா படத்தில் தமன்னாவை ஓரங்கட்டி விட்டு கமிட்டாகி விட்டார்.
இப்படி ஸ்ருதியின் சினிமா கேரியர் நன்றாக போய்க்கொண்டிருப்பதால், அடுத்து தனது இளைய மகள் அக்ஷராவையும் கதாநாயகியாக களமிறக்க ரெடியாகி வருகிறார்
கமல்.
அக்ஷராவுக்கு சினிமாவில் நடிப்பதை விட இயக்குனர் ஆவதிலும் ஆர்வம் உள்ளதாம். அதற்காக பிரபல பாலிவுட் இயக்குனர் ஒருவரிடம் துணை இயக்குனராக சேர்ந்துள்ளார்.
ஆனால், சில மாதங்களுக்கு முன்பு சி.சி.எல் கிரிக்கெட் போட்டிகளிலும், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பிலிம்பேர் விருது நிகழ்ச்சியிலும் அக்ஷராவைப் பார்த்த தெலுங்கு தயாரிப்பாளர்கள் அவரை நடிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டிருக்கிறார்களாம். அனேகமாக தெலுங்கில் தான் அவரது அறிமுகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.