புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013




                விஜய்யின் "தலைவா'’ பட விவகாரம் முடிவுக்கு வராமல் நீண்டபடி இருக்கிறது.

நடிகரும், பத்திரிகையாளருமான சோவை 14-ந் தேதி மாலை விஜய் சந்தித்து "தலைவா' படச் சிக்கல் தீர, முதல்வரிடம் பேசி உதவும்படி’ கேட்டுக்கொண்டார். ஆனால்... "எல்லாரும் எம்.ஜி.ஆர்.ஆகிவிட முடியாது. அரசியல் சாய லுடன் படம் எடுக்கும்போதே அதனால் வரும் சிக்கல்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அரசிடம் வரிவிலக்கு சலுகைக்காக
nakeeranபோயிருக்கக் கூடாது. என்னால் இப்போது முதல்வரிடம் பேச முடியாது'’எனச் சொல்லிவிட்டாராம் சோ. ஏற்கனவே அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் வேந்தர் மூவீஸுக்காக பச்சமுத்து தரப்பில் ஜெ.விடம் பேச முயன்றனர். அதுவும் முடியவில்லை. இப்போது நரேந்திர மோடி மூலம் ஜெ.வை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

கடந்த 12-ந் தேதி சென்னை திரும்பிய ஜெ.வை சந்தித்துவிட விஜய் தரப்பில் அப்பாயின்ட்மென்ட் கேட்கப்பட்டிருந்தது. 14-ந் தேதி எப்படியும் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். சுதந்திர தினத்தன்று படம் வெளியாகிவிடும்... என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஆனால் ஜெ. நேரம் ஒதுக்கவில்லை. சுதந்திரதின கொண்டாட்டம் முடிந்ததும் மறுபடியும் ஜெ. கொடநாடு செல்கிறார் என தகவல்கள் பரவியதால்... 14-ந் தேதி மாலையில் விஜய் தன் வீட்டில் வைத்து வீடியோ மூலம் வேண்டுகோள் வைத்தார். அந்த வீடியோ கிளிப்பிங்ஸ் மீடியாவுக்கு அனுப்பப்பட்டது.

""முதல்வர் அம்மா அவர்களைச் சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கேட்டிருக்கிறோம். "தலைவா'’ படப் பிரச்சினையை தீர்த்து வைப்பார் என நம்புகிறேன்'' என சரண்டராகி  வீடியோவில் பேசியுள்ளார் விஜய்.

"தலைவா'’படத்தின் திருட்டு விசிடி மீது நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறைக்கு நன்றி'’ என்றும் விஜய் அந்த வீடியோ பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் போலீஸாரின் நடவடிக்கைகளோ ‘"தியேட்டருக்கு வராத "தலைவா'’ வீடுதோறும் வரட்டும்... திடுட்டு விசிடி மூலம்'’என்பது போலத்தான் இருக்கிறது என்கிறார்கள் பல தரப்பிலும். 12-ந் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில், காவல் நிலையம் பின்புறமுள்ள குணசேகரன் என்பவரின் சி.டி கடையில் "தலைவா'’ படத்தின் சி.டி ரூ.50க்கு விற்கப்படுவதாக, அறந்தாங்கி இன்ஸ்பெக்டர் பாலாஜியிடம் வாய்மொழியாக புகார் அளித்தனர். ‘"நடவடிக்கை எடுப்பதாக'ச் சொன்ன இன்ஸ். சைலண்ட் ஆகிவிட, அதன் பிறகு சி.டி விற்பனை அமோகமானது. இதையடுத்து ரசிகர்கள் அந்தக் கடைக்குச் சென்று சி.டி கேட்க, 50 ரூபாய் வாங்கிக் கொண்டு மூன்று கவர்களில் பாதுகாப்பாக அடைக்கப்பட்ட "தலைவா' சி.டியை தந்திருக்கிறார்கள். திருட்டு சி.டி விற்பனையை உறுதி செய்துகொண்ட ரசிகர்கள் மற்ற ரசிகர்களுக்கு தகவல் தர... ஆவேசமாக திரண்டு வந்த ரசிகர்கள் அந்த கடைக்குள் புகுந்து சி.டி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினார்கள். அதை சாலையில் அள்ளி வந்து போட்டார்கள். அங்கு வந்த போலீஸார் ‘கடைக்குள் அத்துமீறி நுழைந்து சேதப்படுத்தியதாக’ ஒன்றிய தலைவர் ஜீவா, நகரத்தலைவர் முருகையன், பொறுப்பாளர்கள் சதீஷ், கிள்ளிமுகமது மற்றும் சுரேஷ் ஆகியோரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார்கள்.

சம்பவ இடத்துக்கு சென்ற நம்மிடம் கைது செய்யப்பட்ட ஜீவா ""தலைவா'’திருட்டு விசிடியை போலீஸ் தடுக்கலை. வித்தவங்க மீது நடவடிக்கை எடுக்காம, புகார் செஞ்ச எங்களை ஜெயிலுக்கு அனுப்புறாங்க'’என குமுறினார். இதே நிலைதான் பல மாவட்டங்களிலும். 

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்       டர் சித்திரசேனன் மாவட்டம் முழுவதும் "தலைவா' படத்திற்காக விஜய் ரசிகர்களால் வைக்கப் பட்டுள்ள பேனர்கள் முழுவதையும் அகற்ற உத்தரவிட்டார். இதனால் கலெக்டரிடமே ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

"சட்டம்-ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது. பல பேனர்கள் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருக்கு. பொதுமக்களுக்கும் பேனர்கள் தொல்லையாக இருப்பதால் அகற்றப்படுகிறது'’என விளக்கம் சொன்னார். ‘"முதலமைச்சரோட பேனர்கள் கூட பல இடங்களில் அனுமதி இல்லாம வைக்கப்பட்டிருக்கு. அதையெல்லாம் அகற்றுவீங்களா?'’ என ரசிகர்கள் கேட்க, பதில் சொல்லாமல் நழுவிவிட்டார் கலெக்டர்.

இப்படி "தலைவா'’ பலவித பதட்டங்களை சந்தித்து வரும் நிலையில் வியாபார ரீதியாகவும் பலப்பல சிக்கலுக்கு ஆளாகியிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் திரையரங்க வாயிலாக மட்டும் சுமார் 33 கோடி ரூபாய்க்கு படம் பிசினஸ் ஆகி யிருந்தது. இதை வசூலித்து கூடுதலாக 20 கோடி ரூபாய் வரை வசூலாகியிருக்கும். வரிவிலக்கு இல்லாவிட்டாலும் திட்டமிட்டபடி படம் வெளியாகியிருந்தால் அரசுக்கு வரியாக சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வந்திருக்கும். அதுவும் இப்போது இல்லை. தியேட்டர் கேண்டீன் மற்றும் பார்க்கிங் மூலம் 15 கோடி கலெக்ஷன் வருவதும் போச்சு. எம்.ஜி. எனப்படும் மினிமம் கியாரண்டி முறையில்தான் படத்தின் பிசினஸ் ஆகியிருந்தது. சுதந்திர தினத்திற்கும் படம் வெளியாகாது என்பது தெரிந்ததால் 14-ந் தேதி கூடிய தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் எம்.ஜி. முறையை ரத்து செய்துவிட்டனர்.

""ஒரு தியேட்டரில் எம்.ஜி. முறையில் 30 லட்ச ரூபாய்க்கு படத்தை வாங்கியிருந்தால்... படம் வெளியாகி எவ்வளவு தொகை வசூலித்தாலும் அவ்வளவு லாபமும் எம்.ஜி. போட்டவருக்குத்தான். எம்.ஜி. தொகையான 30 லட்சத்திற்கு குறைவாக வசூலானாலும் அந்த நஷ்டமும் எம்.ஜி. போட்டவருக்குத்தான். எம்.ஜி. முறையை ரத்து செய்துவிட்டு அட்வான்ஸ் முறையில் பிசினஸ் மாற்றப் பட்டிருக்கிறது. எம்.ஜி.க்காக கொடுத்த 30 லட்சம் அட் வான்ஸாக கருதப்படும். படம் வெளியான பிறகு 30 லட்சம் போக மீதம் வருகிற வசூல் என்பது தியேட்டர்காரர் களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பகிரப்படும். 30 லட்சம் வசூலாகாமல் போனால் ஏற்படும் நஷ்டத் தொகையை படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டாளரான வேந்தர் மூவீஸிடம் நஷ்ட ஈடாக தியேட்டர் காரர்களும், விநியோகஸ்தர்களும் கேட்டுப் பெறுவார்கள். தர மறுத்தால் வேந்தர் மூவீஸின் அடுத்தடுத்த படங்களுக்கு "ரெட்' போடுவார்கள். திருட்டு விசிடி பரவிவரும் நிலையில் வசூல் பாதிக்கப்படும். இதனால் வேந்தர் மூவீஸுக்கு சுமார் 15 கோடி வரை நஷ்டம் உண்டாகும். இதை தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும், விஜய்யும், டைரக் டர் விஜய்யும் சேர்ந்து சரிக்கட்ட வேண்டும்'' என்கிறார்கள் விநியோக ஏரியா புள்ளிகள். 15-ந்தேதி மீடியாவைச் சந்தித்த "தலைவா' படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் "படத்தின் திருட்டு வி.சி.டி. வந்து கொண்டிருக்கு. நெட்டிலும் டவுன்லோட் செய்றாங்க. தமிழ்நாட்டில் ஏன் இந்தப் படம் ரிலீஸ் ஆகலேனு தெரியல. இனியும் படம் வெளியாகாமல் போனால் நானும் என் குடும்பமும் நடுத்தெருவுக்கு வந்திடுவோம்!' என உருக்கமாகப் பேசினார்.

விஜய்யின் மாஸு மற்றும் வசூலில் வரும் காசு... என இரண்டையும் முடிந்த அளவு காலி பண்ணிவிட்டதாக ஆனந்தக் கூத்தாடுகிறது அதிகாரம்

ad

ad