புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013


விஜய் நடித்த தலைவா படத்தை வெளியிட தயார்: சரத்குமார் பதவி விலக வேண்டும்: ஜெ.அன்பழகன் அதிரடி
 


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள படம் ‘தலைவா’. இப்படம் கடந்த 9-ந் தேதி தமிழகத்தை தவிர மற்ற நாடுகள், மாநிலங்களில் வெளியாகி உள்ளது.
படம் வெளியாக ஒத்துழைக்குமாறு முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நடிகர் விஜய் அறிக்கையாகவும், வீடியோவிலும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயினும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை.

இந்நிலையில் திமுக எம்எல்ஏவும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் எங்களிடம் 300 திரையரங்குகள் உள்ளன. விஜய் விரும்பினால் தலைவா படத்தை வெளியிட தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.
தலைவா திரைப்படக்குழு என்னிடம் கேட்டால், நான் கண்டிப்பாக தலைவா திரைப்படத்தை அன்பு பிக்சர்ஸ் சார்பில் வெளியிடுவேன். எங்கள் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் மட்டும் 300 திரையரங்குகள் இருக்கின்றன. கட்சி சார்பற்று ஒரு தயாரிப்பாளராகத்தான், நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன். பல கோடிகள் செலவு செய்து எடுத்த படம் வெளியாகாமல் நஷ்டம் ஏற்படுத்தினால் அந்த வலி எப்படி இருக்கும் என்று ஒரு தயாரிப்பாளராக நான் உணர்கிறேன். 
தமிழக மக்கள் அனைவருக்கும் தற்போது தலைவா திரைப்படம் தேவை. தலைவா திரைப்படத்தை ரிலீஸ் செய்யும் தைரியம் எனக்கு இருக்கிறது. நடிகர் சங்கத் தலைவராக இருக்கும் சரத்குமார் தலைவா பிரச்சனையில் என்ன முயற்சி எடுத்திருக்கிறார். முதலமைச்சரின் வலதாக இருக்கும் சரத்குமார் என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறார். இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு எவ்வித தீர்வு காணவும் முயற்சி செய்யாத சரத்குமார் நடிகர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகவேண்டும். வேறொருவர் அந்த பதவிக்கு வரவேண்டும். 

தலைவா திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்கள் கஷ்டப்படுகிறார்கள். ரசிகர்களுக்காகத்தான் திரைப்பட கலைஞர்கள் வேலை செய்கிறோம். தியேட்டரில் படம் பார்ப்பதெற்கென்று தனி ரசிகர் கூட்டம் இருக்கையில், திரைப்படம் எதில் வெளிவந்தாலும் பயமில்லை. இவ்வாறு கூறியுள்ளார். 

ad

ad