புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஆக., 2013

வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் - வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பகிறது.
கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலேயே இந்த துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எனும் பெயரில் வட மாகண சபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் குறித்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் - ஜனநாயக ஜக்கிய முன்னனி எனும் கட்சியினாலேயே இந்த துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் விடியலுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் மறைந்த ஈழ தமிழர் தந்தை செல்வாவின் வழியில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின்  இரட்டை இலை  சின்னத்தில் போட்டியிடுவதாக குறித்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சயம் வெற்றி பெறும்: ஐ.தே.க
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிச்சியமாக வெற்றி பெறும் என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக்கட்சியின் முதலமைச்சர் பதவியை பெறும் நோக்கத்தில் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவில்லை.
அடுத்து நடைபெறவுள்ள பிரதான தேர்தலில் அரசியலில் ஈடுபடுவதற்கு தேவையான பின்னணியை கட்டியெழுப்புவதற்காகவே அங்கு தேர்தலில் போட்டியிடுகிறோம்.
வடக்கு மாகாணத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் அந்த பிரதேசத்தில் பிரசாரங்களை மேற்கொள்வதற்கு தேவையான கீழ் மட்டத்திலான அமைப்புகளை வலுப்படுத்த உள்ளோம்.
அதற்கு தகுதியான பிரதிநிதிகளை பெற்று கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்
அதுவேளை வடக்கு தவிர்ந்த ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிடும் வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கம் ஆச்சரியமடையும் வகையிலான தேர்தல் முடிவுகளை எமது கட்சி பெறும் என்றார்.

ad

ad