புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்ளுவதற்காக நியுயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமர் ஜோன் கே வுடன் நேற்று முன்தினம் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதே
இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியுஸிலாந்து பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ இலங்கை யாருக்கு ஆதரவளிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் எனினும் கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு குறித்தும் இந்த சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடக அலகு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்த நியுஸிலாந்து பிரதமர் 2011 ஆம் ஆண்டு ஆஸி.யின் பேர்த் நகரில் நடைபெற்ற மாநாட்டில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் எனவே இலங்கை மாநாட்டை எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய வர்த்தக ஒன்றிய மாநாட்டுக்கு வர்த்தக தூதுக்குழு ஒன்றை அனுப்புமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நியுஸிலாந்து பிரதமர் வர்த்தக தூதுக்குழுவை அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நியுஸிலாந்தின் தொழில்நுட்ப உதவிகளை வழங்க முடியும் என்றும் நியுஸிலாந்தின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்ற நிலைமகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியுஸிலாந்து பிரதமருக்கு விளக்கமளித்துள்ளார்.
இது இவ்வாறு இருக்க 2015 மற்றும் 2016 ஆம் காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையில் உறுப்புரிமையை பெறுவதற்கு நியுஸிலாந்து எடுக்கும் முயற்சிக்கு உதவுமாறு நியுஸிலாந்து பிரதமர் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த ஜனாதிபதி இலங்கை யாருக்கு ஆதரவளிப்பது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் எனினும் கோரிக்கை குறித்து பரிசீலிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான நிமால் சிறிபால டி. சில்வா டலஸ் அழகப்பெரும ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி பாலித்த கோஹன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ad

ad