புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 செப்., 2013

வெள்ளை மாளிகையில்  ஒபாமாவுடன் மன்மோகன் சிங் சந்திப்பு
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள் வதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நேற்று முன்தினம் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் போய்ச் சேர்ந்தார்.
நேற்று அங்குள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து பேசினார்.

இதற்காக வெள்ளை மாளிகை வந்த மன்மோகன் சிங்குடன் வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், அமெரிக்கா வுக்கான இந்திய தூதர் நிருபமா ராவ் ஆகியோரும் வந்தனர்.



இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவுகளையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், உள்நாட்டு மற்றும் கடல் பிராந்திய பாதுகாப்பு, தீவிரவாதம், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து மன்மோகன் சிங்கும், ஒபாமாவும் ஆலோசனை நடத்தினார்கள். அமெரிக்க விதிமுறைகளில் செய்யப்பட்ட மாற்றம் காரணமாக, இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் பாதிக்கப்படும் பிரச்சினையும் பேச்சுவார்த்தையில் இடம் பெற்றது.

ad

ad