-

22 செப்., 2013

வடமேல் மாகாணத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 34 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மத்திய மாகாணத்தில் 36 ஆசனங்களை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.  
ட மேல் மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 34 ஆசனங்களையும் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 12 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.

ஜனநாயக கட்சி மூன்று ஆசனங்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.


வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் எவ்வித போனஸ் ஆசனங்கள் இன்றி மத்திய மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 36 ஆசனங்களை பெற்றுள்ளது.
இதேவேளை, பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி 16 ஆசனங்களையும் ஜனநாயக கட்சி இரண்டு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனத்தையும் பெற்றுள்ளன.

ad

ad