புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013




                ""ஹலோ தலைவரே... தேசிய அளவில் பா.ஜ.க.வும் தமிழக அளவில் அ.தி.மு.க.வும் எம்.பி. தேர்தல் வேலைகளை முன்கூட்டியே தொடங்கி வேகமா போய்க்கிட்டிருக்குது.''

""தி.மு.க சைடிலும் மா.செ.க்கள் கூட்டம் போட்டு எம்.பி. தேர்தல் பற்றி ஏற்கனவே
பேசினாங்களே.''nakkeran 

""போன சனிக்கிழமையன்னைக்கு நடந்த தி.மு.க இளைஞரணி கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டிருக் குங்க தலைவரே..  கலந்துகொண்ட நிர்வாகிகள் பலரும் 2004 போல மெகா கூட்டணியை உருவாக்கினால் 40 தொகுதிகளும் நமக்குத்தான்னு சொன்னதோடு, கலைஞரின் வியூகத்தை ஸ்டாலின்தான் வழிநடத்த ணும்னும் பேசினாங்க.'' 



""அதற்கு ஸ்டாலினோட  பதில் என்ன?''

""எம்.பி. தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு இளைஞரணியோட பங்குதான் அதிகளவில் இருக்கணும்னு சொன்ன ஸ்டாலின், கூட்டணியா கூட்டணி இல்லையாங்கிறது பற்றி நீங்க யோசிக்கவேண்டாம். அதை கலைஞர் பார்த்துக்குவார். 2004 போலவே முழு வெற்றி கிடைக்க வியூகம் வகுப்பார். எல்லா நிலையிலும் தோற்றுப்போயிருக்கும் ஜெ. ஆட்சியின் மக்கள் விரோத செயல்களை பொதுமக்கள் கவனிச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. இதனை நாம் மேலும் அதிகமாக மக்களிடம் கொண்டு போனால் நம்முடைய வெற்றி இன்னும் அதிகரிக்கும். முன்பு போல, கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை அள்ளிக்கொடுத்துவிட்டு, அங்கெல்லாம் அவர்கள் தோற்பதன் மூலம், நம்முடைய வெற்றியும் பறிபோய் நம்முடைய எதிரிகளுக்கு சாதகமான நிலை உருவாக விடக்கூடாது. சீட்டுகளைத் தீர்மானிக் கும் சக்தியாக இருந்துதான் தி.மு.க தன்னுடைய கூட்டணியை அமைக்கும். இப்போதைய நிலையில், தனித்து நின்றாலே நாம் 15லிருந்து 16 எம்.பி தொகுதிகள் வரை ஜெயிப்போம்னு இளைஞரணி கூட்டத்தில் சொல்லியிருக்காரு.''

""அப்படின்னா, கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் ஸ்டாலின் ஆர்வமா இல்லையா?''

""அவரோட நெருக்கமான வட்டாரங்களில் பேசி னேங்க தலைவரே.. அ.தி.மு.க.வோடு எந்தக் கட்சி கூட்டணி பேசினாலும், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணின்னும், தி.மு.க.வுடன் எந்தக் கட்சி பேசினாலும், மற்ற கட்சிகளிடம் கூட்டணி அமைக்க தி.மு.க. பேச்சுன்னும் மீடியாக்களில் வெளியாகும் செய்திகளை சுட்டிக்காட்டும் ஸ்டாலின், நம்ம கட்சியோட கையில்தான் அதிகாரம் இருக்கணும்னு வலியுறுத்துறாராம். தமிழகம் முழுக்க டூர் போய்க்கிட்டிருக்கும் அவர், பல இடங்களிலும் காங்கிரசை விமர்சித்துப் பேசியதால, மறுபடியும் அதோடு கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டலை. தே.மு.தி.க. வுடன் கூட்டணி தொடர்பா சுதீஷ்கிட்டேயே ஸ்டாலின் பேசியும், விஜயகாந்த் பிடிகொடுக்கலை. ராஜ்யசபா எம்.பி. தேர்தலிலும் விஜயகாந்த் அவமானப் படுத்திட்டதா ஸ்டாலின் நினைக்கிறார். அதனால தி.மு.க தனிச்சி நின்னாலே 12 முதல் 16 சீட்டுகள் வரை பிடிக்கலாம்னு தனக்கு கிடைத்த ரிப்போர்ட்டுகள் அடிப்படையில் ஸ்டாலின் நம்புறார். அப்பதான் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க பலமான கட்சியாக களம் காண முடியும்ங்கிறது ஸ்டாலினோட கணக்கு. கூட்டணிக்காக யாரையும் தேடிக் கொண்டிருக்காமல் புது ரூட்டில் தி.மு.க பயணிக்கலாம்னு ஸ்டாலின் நினைக்கிறார்.''

""குடிநீர், கல்வி, மருத்துவம் இந்த மூன்றும் மக்க ளுக்கு இலவசமா தரவேண்டியது அரசாங்கத்தோட கடமை. இந்த மூன்றும் இங்கே தனியாரின் வியாபாரமாகி விட்டது. இப்ப தமிழக அரசே குடிநீரை பாட்டிலில் அடைச்சி, 10 ரூபாய்க்கு வியாபாரம் செய்யுது. எங்கே போய்க்கிட்டிருக்கோம்னு தெரியல... சரிப்பா... அடுத்த மேட்டருக்கு வர்றேன்... அ.தி.மு.க.வில் எம்.பி. தேர்தலுக் காக மாவட்ட பொறுப்பாளர்களை ஜெ. நியமிச்சிருக்காரே…?''

""ஆமாங்க தலைவரே.. … மந்திரிகளுக்கு எம்.பி எலக்ஷன் அசைன்மெண்ட் இருப்பதால இப்போதைக்கு மந்திரிசபை மாற்றம் இருக்காதுங்கிறதை நம்ம நக்கீரன்தான் திரும்பத் திரும்பச் சொல்லிக்கிட்டிருந்தது. ஆனாலும், ஏற்கனவே பதவி பறிபோனவங்களும், பதவியை எதிர்பார்க்கிறவங்களும் தங்களுக்கு ஏதாவது முக்கிய பொறுப்பு கிடைக்கும்னு எதிர்பார்ப்போடு இருப்பதையும் நம்ம நக்கீரன்தான் சொன்னது. அமைச்சரவை மாற்றம் இப்போதைக்கு இல்லங்கிறதைக் காட்டும் வகையில் மந் திரிகளையும் மா.செ.க்களையும் எம்.பி. தொகுதி பொறுப் பாளரா ஜெ. நியமனம் செய்திருக்கிறார். ரீ-என்ட்ரி கிடைக் கும்னு எதிர்பார்க்கப்பட்ட ஜெயக்குமார், கே.ஏ. செங் கோட்டையன், சி.வி.சண்முகம், நயினார் நாகேந்திரன் இவங்க யாருக்கும் தொகுதி பொறுப்பு கிடைக்கலை.''

""பதவி நீக்கப்பட்ட மந்திரிகளான கோகுல இந்திரா மத்திய சென்னைக்கும் உதயகுமார் சிவகங்கைக்கும் பொறுப்பாளர்களா நியமிக்கப்பட்டிருக்காங்களே?''

""தனக்கு வந்த ரிப்போர்ட் அடிப்படையில்தான் மாவட்டந்தோறும் பொறுப்பாளர்களை நியமித்தாராம் ஜெ. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான நால்வர் அணி ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்குது. அதுபோல உளவுத்துறைகிட்டேயிருந்தும் ரிப்போர்ட் வந்திருக்குது. சீனியர்களான பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், மதுசூதனன், அன்வர்ராஜா இவங்களையும் பொறுப்பாளர் களா நியமிச்சதுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் தான் காரணமாம். மந்திரி காமராஜுக்கு நாகை தொகுதியோடு புதுச்சேரி தொகுதி பொறுப்பும் கொடுக்கப்பட்டிருப்பது கட்சியில் பலருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்குது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் கட்சி நிர்வாகிகளிடம் ஆதிக்கம் செலுத்திவந்த நால்வர் அணியினரை அவரவர் மாவட்டத் தில் உள்ள எம்.பி. தொகுதிக்குப் பொறுப் பாளராக்கியதன் மூலம் அவங்க பவரை ஜெ. பிடுங்கிட்டாருன்னு கட்சிக்காரங்க சந்தோ ஷப்படுறாங்க. எல்லாத் தொகுதிகளுக்கும் பொறுப்பாளரை நிய மிச்சதால, கூட்டணியில் தங்களுக்கு இடம் இருக்குமா இருக்கா தான்னு சி.பி.எம்மும் சி.பி.ஐ.யும் அதிர்ச்சி யடைஞ்சிருக்குது.''

""அ.தி.மு.கவில் இளைஞர்கள்- இளம் பெண்கள் பாசறை செய லாளர் பதவியையும், மாணவரணி செயலாளர் பதவியையும் பலரும் எதிர்பார்த்திருக்க, அதைத் தன் மகனுக்கு கிடைக்கச் செய்வதற்காக ஓ.பி.எஸ் காய்நகர்த்திக்கிட்டிருக்கிறார்னு போனமுறை தான் பேசிக்கிட்டிருந்தோம். இரண்டு பதவிக்கும் வேற ஆட்களை ஜெ. நியமிச்சிட்டாரே, என்ன காரணமாம்?''

""பொதுவா ஜெ. எதையும நாள், நேரம் பார்த்துதான் செய்வார். சட்டமன்றத்தில் 110விதியின்கீழ் அறிக்கை வாசிக்கணும்னாகூட இந்த நேரத்தில் வாசிக்கணும்னு முன்கூட்டியே சபாநாயகருக்குத் தகவல் போயிடும். அந்த நேரத்தில், தொகுதி பிரச்சினை சம்பந்தமா கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏக்கள் யாராவது ரொம்ப நேரமா பேசிக்கிட்டிருந்தாங்கன்னா, சட்டுன்னு நிறுத்தச் சொல்லி சபாநாயகர் உத்தரவுபோட்டுட்டு, ஜெ.வின் அறிக்கையை வாசிக்க நேரம் ஒதுக்குவார். அப்படிப்பட்ட ஜெ., அஷ்டமி-நவமி நாட்களில் பாசறைக்கும் மாணவரணிக்கும் பொறுப்பாளர்களை நியமிப்பார்னு ஓ.பி.எஸ். உள்பட யாரும் எதிர்பார்க்கலை. அதே நாளில்தான் மோடியையும் பிரதமர் வேட்பாளரா பா.ஜ.க அறிவித்தது. இந்த நாளில் அறிவிக்கலாம்னு ஜோசியர்கள் சொன்னதன் படிதான் இதெல்லாம் நடந்திருக்குதாம். ஜெ. அறிவித்த இரண்டு அணிகளின் பொறுப்பாளர்களுமே நால்வர் அணியால் சிபாரிசு செய்யப்பட்டவங்கதானாம்.''

""ஓ''

""பாசறைக்கான லிஸ்ட்டில் அமைச்சர் செந்தில்பாலாஜி பெயர் முதலில் இருந்திருக்குது. நல்ல சாய்ஸ்னு சொல்லிக் கிட்டே அடுத்த பெயரை பார்த்திருக்கிறார் ஜெ. திருச்சி எம்.பி குமார் பெயர் இருந்ததும், வெரிகுட் சாய்ஸ்னு சொல்லி உடனே டிக் பண்ணிட்டாராம். மூன்றாவதா இருந்த விஜய பாஸ்கர் பெயர் ஜெ.வை ஈர்க்காமல் போயிடிச்சி. சசிகலா உறவினர் கலியபெருமாளால் 2009-ல் எம்.பி. சீட் வாங்கி ஜெயித்தவர் குமார். இவர் மாநிலப் பொறுப்பு எதிலும் இல்லை. மாவட்ட வழக்கறிஞரணியில் இணைச் செயலாளர், அவ்வளவுதான்.'' 

""அவரை எப்படி வெரிகுட் சாய்ஸ்னு ஜெ. செலக்ட் பண்ணினாராம்?

""2009 எம்.பி தேர்தலுக்குப் பிறகு நடந்த  அ.தி.மு.க. செயற்குழுவில் ஜெ. பேசும்போதே, சட்டை கசங்காம எம்.பியானவர் ஓ.எஸ்.மணியன். ஏன்னா, அவருக்கு எதிரா நின்ன வேட்பாளர் அப்படி. ஆனா, கஷ்டப்பட்டு ஜெயிச்சவர் திருச்சி குமார். நான் திருச்சியில் பிரச்சாரம் முடிச்சிட்டு ஏர்போர்ட்டுக்கு வந்தப்ப, வியர்வையும் கசங்கிய சட்டையுமா ஒருத்தர் வந்தார். யாருன்னு கட்சிக்காரங்ககிட்டே கேட்டேன். இவர்தான் வேட்பாளர்னு சொன்னாங்க. கஷ்டப்பட்டு உழைச்சி ஜெயிச்சவர்னு அப்பவே குமாரை ஜெ. பாராட்டினாராம். இப்ப பதவி கொடுத்திருக்கிறார்.''

""மாணவரணி செயலாளரா விஜயகுமார் நியமிக்கப் பட்டிருக்கிறாரே?''

""அவர் தென்சென்னை மாவட்ட மாணவரணி செய லாளர். மாநில மாணவரணி செயலாளர் பதவிக்கு நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த  ஜெரால்டு பேரைத்தான் முதலில் சிபாரிசு பண்ணியிருக்காங்க. இவர் ஓ.பி.எஸ் மகனுக்கு தோஸ்த்தாம். அதுபோல தென்சென்னை இளைஞர் பாசறை இணைச் செயலாளர் முரளிகிருஷ்ணன் பெயரும் அடிபட்டி ருக்குது. பிராமணரான இவர் ஆங்கிலத்தில்தான்  அதிகம் பேசுவார். போயஸ்கார்டனிலிருந்து ஜெ. வெளியே வரும் போது வாசலில் நின்று கும்பிடு போடுவது முரளிகிருஷ்ண னோட வழக்கம். ஆனா, இவங்க ரெண்டு பேரையும் தாண்டி விஜயகுமாரை செலக்ட் பண்ணியிருக்கிறார் ஜெ.. பாசறை, மாணவரணி இரண்டிலும் புதுப்பொறுப்புக்கு வந்திருப்பவங்க சசிகலா ஆட்கள்னு, இந்தப் பதவியை எதிர்பார்த்துக் கிட்டிருந்தவங்க சொல்றாங்க.''

""ஏம்ப்பா.. மோடியை பிரதமர் வேட்பாளரா செலக்ட் செய்தது பற்றி கலைஞரிடம் பிரஸ்காரங்க கேட்டப்ப, அதைப் பற்றி அத்வானிதான் சொல்லணும்னு பதில் சொன்னார். மோடிக்கும் அத்வானிக்கும் முட்டல்மோதல் இருந்த நேரத்தில் தலைமைச் செயலகத்தில் ஜெ.வை சந்தித்திருக்காரே சோ? இது பற்றித்தானே பேசியிருப்பாங்க?''

""அதிலென்ன சந்தேகங்க தலைவரே.. .. கார்டனில் சந்திக்கணும்னு தான் சோ அப்பாயிண்ட்மெண்ட் கேட் டாராம். ஆனால், செகரட்டரியேட் டுக்கு வரச்சொல்லி தகவல் போயிருக் குது. இந்தியாவின் பல பகுதிகளிலிருந் தும் தனக்கு ஆதரவான அறிக்கை வர ணும்ங்கிறது மோடியின் எதிர்பார்ப்பு. தன்னுடன் நட்புறவாக இருக்கும் ஜெ.வின் அறிக்கையை எதிர்பார்த்து, சோவிடம் மோடி வலியுறுத்த அதை யடுத்துதான் இந்த சந்திப்பு நடந்திருக் குது. வாஜ்பாய் அரசை ஜெ. கவிழ்த்த தாலதான், தி.மு.க டெல்லி அரசியலில் கிட்டதட்ட 15 வருசமா ஸ்ட்ராங்கா இருக்குதுன்னும், அந்த வாய்ப்பைக் கொடுக்கா மல் இருந்தால், தி.மு.க.வை இந்நேரம் ஜெ.வால் ஒழித்திருக்க முடியும்னும் சோ சொல்லியிருக் கிறார். இப்போதைய நிலையில், மோடிதான் பிரதமர் வேட்பாளர்னு இமேஜ் கூடியிருப்பதால், அவரை சப்போர்ட் பண்ணும்படியும், தன்னை பிரதமராக முன்னிறுத்தும் ஜெ.வின் செயல் பாட்டைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்து, மோடி யுடன் கூட்டணி அமைத்துக்கொண்டால், டெல்லியில் பவர்கேம் ஆடி, தி.மு.க.வை ஓரங்கட்டிவிடலாம்னும் சோ சொன்னாராம்.'' 

""அதற்கு ஜெ.வின் ரியாக்ஷன் என்ன?''

""மோடிக்கும் அத்வானிக்கும் ஏற்பட்ட மோதல் பற்றியெல்லாம் விரிவாகக் கேட்டுக் கொண்ட ஜெ., தன்னுடைய கூட்டணியில் கம்யூனிஸ்ட்டுகள் இருப்பதால் வெளிப்படையா பா.ஜ.க.வை ஆதரிப்பது பற்றி யோசிக்கணும்னும், ஒருவேளை, எம்.பி. தேர்தலில் பா.ஜ.க.வை அ.தி.மு.க. ஆதரித்து, மோடியே பிரதமராகி விட்டால் இரண்டு மாதத்தில் கம்யூனிஸ்ட்டுகள் அவரை எதிர்த்துப் போராட்டம் நடத்துவாங் கன்னும், அது சட்டமன்றத் தேர்தலில் அ.தி. மு.க.வுக்கு சிக்கலாயிடும்னு யோசிப்பதா ஜெ. சொல்லியிருக்கிறார். எம்.பி. தேர்தல் என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு தனி வாக்குவங்கி உண்டுன்னும், அதை எதிர்கொள்ள மோடி இமேஜுடன் வரும் பா.ஜ.க.தான் சரியான சாய்ஸ்னும், சட்டமன்றத்  தேர்தல் வரும்போது மற்றதை யோசிக்கலாம்னும் சோ சொன்னாராம். மோடிக்கு ஆதரவா ஜெ.கிட்டேயிருந்து எப்படி யும் அறிக்கை வரும்னு பா.ஜ.க. தரப்பு நம்பிக்கையா இருக்குது.''

""பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் அதிரடி திருப்பங்கள் தொடர்ந்துக்கிட்டிருக்குதே?''       

""இந்த வழக்கு தொடர்பா சுப்ரீம்கோர்ட் சீனியர் வக்கீல்களை ஜெ.வே தொடர்பு கொண்டு பேசுவதை நம்ம நக்கீரன்தான் தெளிவா சொல்லியிருந்தது. அதன்படிதான், பவானிசிங்கே ஆஜராகலாம்னு ஜெ. தரப்பில் ஸ்பெஷல் கோர்ட்டில் பெட்டிஷன் போடப் பட்டது. அவரை நீக்கியாச்சின்னு கர்நாடக அரசு சொன்னதால, பவானிசிங்கால் வாதாட முடியலை. அதனால, சுப்ரீம்கோர்ட்டில் உடனடியா பெட்டி ஷன் போட்டாங்க. பவானிசிங் நீக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால அவர் ஆஜராகலாம்னு சுப்ரீம்கோர்ட்டில் போன வெள்ளிக்கிழமை உத்தரவு போடப்பட்டது. அதேநேரத்தில், புதிய வக்கீலுக் கான பேனலை ரெடி பண்ணியது கர்நாடக அரசு. இந்த  வேலையை கவனிப்பவர் அந்த மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்மா. ஹைகோர்ட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிற அந்த பேனலில் முன்னாள் அரசு சிறப்பு வக்கீல் பி.வி.ஆச்சார்யா, நாகேந்திரா, நாகேஷ், சந்திரப்பான்னு புகழ்பெற்ற கிரிமினல் லாயர்களோட பெயர்கள் இருக்குது. ஆச்சார்யா மீண்டும் ஆஜராவார்னு பலத்த எதிர்பார்ப்பும் இருக்குது.''

""சொத்துக்குவிப்பு வழக்கு எப்படியெல்லாம் டர்ன் எடுத்திருக்குது, நம்ம நக்கீரன் ஏற்கனவே எழுதியிருந்த விவரங்களை, கலைஞரும் கடிதமா எழுதி அதை தி.மு.கவினர் துண்டுப்பிரசுரமா கொடுத்துக்கிட்டிருக்காங்களே.. இந்த வழக்கில் இன்னும் ஏதாவது டர்ன் இருக்குமா?''

""ஆச்சார்யா மறுபடியும் அரசு வக்கீலா வருவாரா? நீதிபதி பாலகிருஷ்ணா ஓய்வு பெறுவதற்குள்ளே வழக்கின் தீர்ப்பைப் பெற ஜெ. தரப்பு முயற்சி செய்யுமா? தீர்ப்பு எப்படி இருக்கும் இது எல்லாமே இந்த வழக்கில் திருப்பங்கள் நிறைந்ததுதான்.'' 

படங்கள் : ஸ்டாலின் & அசோக்



 லாஸ்ட் புல்லட்!

திருச்சியில் மோடி பங்கேற்கும் பா.ஜக இளைஞரணி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துவரும்வேளையில், ஏர்போர்ட்டில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திசிதம்பரத்தை சந்தித்திருக்கிறார் திருச்சி வேலுச்சாமி. பல மதத்தினரும் வாழும் திருச்சியில் நரேந்திர மோடியை வைத்து இந்துக்கள் ஆதரவைப் பெற நினைக்கும் பா.ஜ.க.வின் திட்டம் நிறைவேறாது. அந்த மாநாட்டுக்குப் பதில் தரும் விதத்தில் உங்கள் அப்பா ப.சி.யை வைத்து ஒரு கூட்டம் போடுங்கள் எனச் சொல்லியிருக்கிறார் வேலுச்சாமி. முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் நினைவு தினத்தையொட்டி ப.சி.யை வைத்து கூட்டம் நடத்துவது பற்றி கார்த்தி ஆலோசித்து வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான பரபரப்புகளுக்கிடையே, முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீதான ஹெராயின் போதைபொருள் வழக்கு 12ஆண்டுகளாக நடைபெற்று, தீர்ப்பு நாட்களில் நீதிபதிகளுக்கு மிரட்டல் கடிதங்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்கிலிருந்து சுதாகரனையும் மற்றவர்களையும் விடுதலை செய்து செப்டம்பர் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியுள்ளார் நீதிபதி சின்னப்பன். 

ad

ad