இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு தமிழச்சி சிங்களவர்களாக மாற்றம்!- கிளிநொச்சியில் இன்று கோலாகலம்.
சிவில் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் இரண்டு பெண்கள் மற்றும் இளைஞர் ஒருவருக்கும் இன்று இராணுவத்தின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெறவுள்ளது.
சிவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்கென இணைக்கப்பட்ட இரண்டு பெண்களும் இராணுவச் சிப்பாய்களை திருமணம் செய்யவுள்ளனர்.
அதேபோல் குறித்த ஆண், இராணுவத்தில் பணியாற்றும் பெண்ணொருவரை திருமணம் செய்யவுள்ளார்.
இவர்களது இந்த திருமணங்கள் இன்று கிளிநொச்சியில் மிகப் பிரமாண்டமாக நடாத்த இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதேவேளை திட்டமிட்ட வகையில் தமிழ் பெண்களையும், ஆண்களையும் இராணுவத்தினருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான நடவடிக்கையே சிவில் பாதுகாப்பு பிரிவின் நோக்கம் என்று மக்கள் விசனமடைந்துள்ளனர
சிவில் பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் மூவர் மற்றும் அந்த படையில் பணியாற்றும் சிங்களவர் ஒருவர் ஆகியோருக்கு முல்லைத்தீவு விஸ்வமடு சிவில் பாதுகாப்பு தலைமையகத்தில் இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
இவர்களில் குள்ளமான ஜோடியான 33 வயதான முருகையா சசிகுமார் கொடிகாமம் தவசிபுரத்தை சேர்ந்த ஜெயராசா மேரி பபிலா ஆகியோ கிறிஸ்தவ முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
மதவாச்சியை சேர்ந்த ஹர்ஷ நுவான் ரத்நாயக்க என்பவர் புதுகுடியிருப்பைச் சேர்ந்த பிரேமரட்ணம் சுகந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டதுடன் இவர்களின் திருமணம் சிங்கள முறைப்படி நடத்தப்பட்டது.
அதேவேளை புதுக்குடியிருப்பைச் சேர்ந்த பேரின்பநாதன் வர்மன் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த நடராசா சுகிர்தா ஆகியோருக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, அத்மிரல் ஆனந்த பீரிஸ் ஆகியோர் பதிவுத் திருமணத்தின் போது சாட்சியாளர்களாக கையெழுத்திட்டனர்.



€€€