புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 செப்., 2013




              முன்னெப்போதும் இல்லாத பிரம்மாண்டத்தைக் காட்ட வேண்டும் என்ற சிரத்தையோடு, தொண்டர்கள் இரண்டு லட்சம் பேர் வருவார்கள் என்னும் எதிர்பார்ப்புடன் விருதுநகரில் செப்.15-ல் மாநில மாநாட்டை நடத்தியது ம.தி.மு.க.
 nakkeran

""பந்தலில் போடப்பட்டிருந்த சேர்கள் முப்பதாயிரம்’ என மறுமலர்ச்சியினர் ஒரு கணக்கு சொன்னாலும்... ‘எண்ணிப் பார்த்து விட்டோம், பதினைந்தாயிரம் சேர்கள்தான். மாநாட்டுக்கு வந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இருபதாயிரம்தான். பெண்கள் கூட்டம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை'' என்று நோட் போட்டு அனுப்பியிருக்கிறது மாநில அரசின் உளவுத்துறை. 

ஈழத்தில் இனப் படுகொலை, மீனவர் கொடுந்துயர், அணு உலை பேரழிவு, உலக நாடுகளில் தமிழர் தடங்கள் என கண்காட்சி திறப்புக்குப் பிறகு மேடையேறிய மறுமலர்ச்சி முன்னணி பேச்சாளர்கள், வழக்கம் போலவே கலைஞர் குடும்பத்தை வசை பாடினார்கள். தி.மு.க.வை கடுமையாக விமர்சித்தார்கள். தமிழ்நாட்டின் அவல நிலைக்கு மத்திய அரசே காரணம் என்று முழங்கினார்கள். காங்கிரஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிவோம் என்று சபதம் எடுத்தார்கள். 



அதே நேரத்தில், அ.தி.மு.க. ஆட்சி குறித்தோ, தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு குறித்தோ,  விலைவாசி குறித்தோ எதுவும் பேசிவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார்கள். பலரும் இதே ரீதியில் பேசினார்கள். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் சேதுசமுத்திர திட்டம் இடம் பெறாதவாறு பார்த்துக்கொண்டார்கள். ஆனாலும், “இந்த மாநாட்டின் வாயிலாக தமிழகத்தில் வைகோ விஸ்வரூபம் எடுத்து விட்டார் 2016-ல் அவர் முதலமைச்சராவார்’ என்பதை பேசிய பலரும் ரிபீட்’ செய்தார்கள். 

சீர்தூக்கும் துலாக்கோல் போல, ஒரு பக்கமாக சாய்ந்து விடாமல், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் ஒரு பிடி பிடித்தது திருப்பூர் துரைசாமி மட்டும்தான். 

""அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடையாது. தி.மு.க. ஆட்சியின் மீதான வெறுப்பே ஜெயலலிதாவை முதலமைச்சர் ஆக்கியது. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி கோர்ட் படியேறிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா''’ என்றெல்லாம் துரைசாமி பேசியதன் தாக்கமோ என்னவோ,  நிறைவுரையின் போது தன்னை வெகுவாக அழுத்திக்கொண்டிருந்த மன பாரத்தை இறக்கி வைத்துவிட்டார் வைகோ.

அண்மைக்காலமாகவே வாஜ்பாய் புகழ்பாடும் வைகோவின் தொனிதான் மாநாட்டில் ஒலிக்கும் என்றும், பா.ஜ.க.வுடனான கூட்டணி குறித்து வெளிப்படையான அறிவிப்பு இருக்காது என்றும் சூசகமாகத்தான் குறிப்பிடப்படும் என்றும் கடந்த இதழிலேயே நக்கீரன் வெளியிட்டிருந்தது. ம.தி.மு.க. மாநாட்டில் வைகோவின் பேச்சும் அப்படித்தான் அமைந்தது.

தி.மு.க.வுடன் கூட்டணி சேர்வதா? ஒரு போதும் இல்லை. அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் கூட்டணியா? நம்ப வைத்து கடைசி நேரத்தில் கழுத்தை அறுக்கும் நயவஞ்சகர்கள். வீர இளவரசன் மறைந்து, திருமங்கலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. நாங்கள்தான் போட்டியிடுவோம் என்றார்கள். சகித்துக் கொண்டேன். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ம.தி. மு.க.வுக்கு 6 சீட் என்றார்கள். 


பிறகு 7 என்றார்கள். ஒரு சீட் கூடுதலாகத் தருகிறோம்... 8 என்றார்கள். பிறகு... எட்டெல்லாம் இல்லை, ஏழுதான் தருவோம் என்றார்கள். உலகத்தில் இப்படி ஒரு கூட்டணி அணுகுமுறையை எங்காவது கேள்விப்பட்டது உண்டா? விவசாயிகளுக்கு உரிய  நிவாரணம் வழங்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தேன். அரசியல் வாழ்க்கையில் விரக்தியின் விளிம்பில் நான் இருக்கிறேனாம். அமைச்சர் பெயராலே ஒரு அறிக்கை. பாவம் அந்த அமைச்சர்... எனக்கு காமாலைக் கண்ணாம். அறிக்கை விடும் அமைச்சருக்கு, விவசாயி வீட்டின் நிலைமை தெரியுமா? அட, பைத்தியக்காரர்களே... இந்த வைகோ ரோஷக்காரன். சுயமரியாதை உள்ளவன். இப்போதும் சொல்கிறேன்... எப்படியாவது பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்று ஏங்குகிற கட்சியாக ம.தி.மு.க. இல்லை. ரொம்ப காலமாக அடிபட்டு வந்திருக்கிறேன். இவ்வளவு தோற்ற பிறகும், இத்தனை உற்சாகமாக இருக்கின்றீர்களே... ஒரு வெற்றி எங்களுக்கு வேண்டும், எங்களை டெல்லிக்கு அனுப்புங்கள். அந்த உத்தரவை மக்களிடம் கேட்போம்''’என்று முடித்தார். 

2014 கூட்டணி பற்றி உள்ளுக்குள் இருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்கள் மல்லை சத்யா போன்றவர்கள். ""நாட்டு மக்களெல்லாம் நமோ... நமோ... என்று தஞ்சமடைவார்கள்'' என்று மகாபலிச் சக்ரவர்த்தியின் கதையைச் சொல்லும் சாக்கில், நரேந்திர மோடியை (நமோ என்பது பெயர்ச் சுருக்கமாம்)  வழிமொழிந்தார்கள். ""இந்தியா முழுவதும் உச்சரிக்கும் மந்திரம் நமோ... நமோ... என்றால், தமிழகம் உச்சரிக்கப் போகும் மந்திரம் வைகோ... வைகோ... என்பதுதான்''’என்று சிலிர்த்தார்கள். 

""விருதுநகர் தொகுதியில் போட்டியிடுவார் வைகோ. உரிய இடத்திலிருந்து சிக்னல்’ கிடைத்த பிறகே மாநாட்டுக்காக விருதுநகரைத் தேர்வு செய்தார்.  அவர் வெற்றி பெறுவது உறுதி'' என்கிறார்கள் நிர்வாகிகள். தொண்டர்களின் கருத்தறிய, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பாலன், மீனாட்சி, கனிமொழி, அய்யாச்சாமி, நீலகண்டன், பூபாலன், முத்துக்குமார் போன்ற மறுமலர்ச்சியினரிடம் பேச்சு கொடுத்தோம். 

""தலைவரின் பேச்சை கவனிச்சீங்களா? வார்த்தைக்கு வார்த்தை வாஜ்பாய்ங்கிறார்.. காங் கிரஸை ஒழிக்கணும்னா என்ன செய்யணும்? பி.ஜே.பி.யோடுதான் கூட்டணி. வேற வழியில்ல. அப்ப தமிழ்நாட்டுல யாரோடு கூட்டணி? பி.ஜே.பி. யோட நல்ல நெருக்கத்துலதான் இருக்காங்க ஜெய லலிதா. அதான்... வைகோ-வ பி.ஜே.பி. கூட்டணில சேர்த்துக்கிறதுக்கு அவங்க எதிர்ப்பு தெரிவிக்க மாட்டாங்க. நல்ல அன்டர்ஸ்டேன்டிங் இருந்ததுனால தான் நடை பயணத்தப்ப ரெண்டு பேரும் சந்திச்சிக் கிட்டாங்க. அமைச்சர் அறிக்கைதான் தலைவர டிஸ்டர்ப் பண்ணிருச்சு. மத்தபடி அ.தி.மு.க. மேல தலைவருக்கு எந்தக் கோபமும் இல்ல''’என்றார்கள் அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களாக. 

-சி.என்.இராமகிருஷ்ணன்

ad

ad