புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2013

பொதுநலவாய மாநாட்டில் 16 நாடுகளின் தலைவர்களே பங்கேற்பு
கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்பதாக இதுவரை 13 நாடுகளின் தலைவர்களே உத்தியோகபூர்வமாக உறுதியளித்திருப்பதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுநலவாய நாடுகள் அமைப்பில் 53 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் 32 நாடுகள் சிறிய நாடுகளாகும்.
இலங்கைக்கு அருகில் இருக்கும் மிகப் பெரிய பொதுநலவாய நாடான இந்தியாவின் அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ள நாடுகளில் பிரதான நாடுகளில் ஒன்றாக இருக்கும் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள போவதில்லை என்று கனடா ஏற்கனவே நேரடியாக அறிவித்து விட்டது.
பிரித்தானியா தலைமையிலான அரச தலைவர்கள் கொழும்பு மாநாட்டில் பங்கேற்க உள்ள போதிலும் பொதுநவாய அமைப்பின் இணக்கப்பாடுகளை முழுமையாக மீறியுள்ள இலங்கை அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைப்பதற்காகவே கொழும்பு வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இங்கை அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் சிறிய நாடுகளுக்கு சென்று அந்நாட்டு தலைவர்களிடம் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிச்சை கேட்டு வருவதாக சிங்கள இணைதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதனிடையே பொதுநலவாய நாடுகள் மாநாட்டுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்காத நிலையில் இலங்கை அரசாங்கம் நெருக்கடிகளை சந்தித்துள்ளதுடன் திறைசேரியில் உள்ள முழு பணத்தையும் மாநாட்டுக்காக செலவிட்டு வருகிறது.
இதனால் அரச நிறுவனங்களின் செலவுகளை ஈடுசெய்ய முடியாத நிதி நெருக்கடியை அரசாங்கம் எதிர்நோக்கியுள்ளது.
அரச நிறுவனம் ஒன்றின் தேவைக்காக 50 ஆயிரம் ரூபாவைக் கூட பெற முடியாத நிலைமை காணப்படுவதாக அரச நிறுவனம் ஒன்றின் அதிகாரிகள் தெரிவிப்பதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.
நாடாளுமன்றத்தின் செலவுகளுக்காக கிடைக்க வேண்டிய 50 மில்லியன் ரூபா பணம் கிடைக்காத நிலையில் நாடாளுமன்ற உணவகத்திற்கு அவசியமான உணவு பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

ad

ad