புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2013

உலகில் பாடசாலை செல்லாத 770 இலட்சம் சிறுவர்கள்
உலகம் முழுவதிலும் சுமார் 77 மில்லியன் சிறுவர்கள் பாடசாலை செல்வதில்லை. மேலும் 66 மில்லியன் சிறுவர்கள் பசியுடனேயே பாடசாலை செல்கின்றனர். இவ்வாறு தெரிவித்துள்ளார் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன.

 
நேபாள நாட்டின் தலைநகரான காட்மண்டுவில் இடம்பெற்ற கழிவுகளை அகற்றுவது தொடர்பான ஐந்தாவது தெற்காசிய நாடுகளின் மாநாடொன்றின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
அமைச்சர் மேலும் அங்கு தெரிவித்ததாவது:
 
பாதுகாப்பு மற்றும் தனியான கழிப்பிட வசதிகள் இல்லாததால் பெருமளவு சிறுமிகள் பாடசாலை செல்லாத நிலையும் காணப்படுகின்றது.
 
இதேவேளை ஒரு மில்லியன் சிறுவர்கள் உட்பட 2.5 மில்லியன் மக்கள் அடிப்படைக் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர். 
 
மேலும் இதன் காரணமாக உலகில் ஒவ்வொரு விநாடிக்கும் குழந்தையொன்று இறந்து போகும் அவலமும் காணப்படுகின்றது.
 
இந்தநிலையில் இலங்கை முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் கழிப்பிட வசதி மற்றும் குடிதண்ணீர் வசதிகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டெமான்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதலின் பிரகாரம் தொடர்புடைய அமைச்சுக்கள் இதற்கான நிதிப் பங்களிப்பை வழங்கவுள்ளன என்றார். 
 
ஒரு மில்லியன் சிறுவர்கள் உட்பட 2.5 மில்லியன் மக்கள் அடிப்படைக் கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் பெரும் இடர்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

ad

ad