புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 அக்., 2013




          எம்.பி. வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் இப்போதே பா.ம.க.வைப் போல் ஜரூராகக் களமிறங்கிவிட்டது அ.தி.மு.க. ஒவ்வொரு மா.செ.வுக்கும் மூன்று வாரங்களுக்கு முன்பு கடிதம் எழுதிய கட்சித் தலைமை, ’உங்கள் மாவட்டத்தில் இருக்கும் நாடாளு மன்றத் தொகுதிகளுக்கு, யார் யாரை வேட் பாளராக நிறுத்தலாம் என்ற பரிந்துரைப் பட்டியலை 15 நாட்களுக்குள் அனுப்பிவையுங் கள் என குறிப்பிட்டிருந்தது. இதன்படி ஒவ்வொரு அ.தி.மு.க., மா.செ.க்களும் தங்களுக்குப் பிடித்த மாதிரி ஒரு பட்டியலை தலைமைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மா.செ.க்கள் அனுப்பி வைத்திருக்கும் அந்த சீக்ரெட் பரிந்துரைப் பட்டியல் இதோ...

திண்டுக்கல்லுக்கு மா.செ.வும் மந்திரியுமான நத்தம் விசுவநாதன், முன்னாள் பழனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் குமார சாமி, தனது மைத்துனர் கண்ணன், ஒ.செ. ஷாஜ கான் ஆகியோரைப் பரிந்துரை செய்ய, தேனிக்கு மா.செ.சிவகுமாரோ  ஓ.பி.எஸ்.சின் மகன் ரவீந்திரநாத், பெரியகுளம் ராமசாமி, மாநில தொழிற்சங்கத் துணைச் செயலாளர் ஜக்கையன் ஆகியோரை பரிந்துரைத்திருக்கிறார். மதுரைக்கு மா.செ.வும் அமைச்சருமான செல்லூர் ராஜுவின் பரிந்துரைக் கடிதத்தில் அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன், மதுரை மாவட்ட கூட்டுறவு சொஸைட்டி நிர்வாகி மரக்கடை கண்ணன் ஆகியோரின் பெயர்கள் இருக்கின்றன.


மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ஜாபர், மேயர் ராஜன் செல்லப்பாவின் மகன் சத்தியன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றிருக் கிறது. தருமபுரிக்கு மா.செ. கே.பி.அன்பழகனோ மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் அன்பழகன், எம்ஜி.ஆர் மன்ற தகடூர் விஜயன், ஒ.செ. கோவிந்தசாமி ஆகியோரைப் பரிந்துரைத்திருக்கிறார். 

கிருஷ்ணகிரிக்கு மா.செ.வும் அமைச்சரு மான கே.பி.முனுசாமியின் பரிந்துரைப் பார்வை,  நகர செயலாளர் கேசவன், மருத் துவ அணி டாக்டர் அசோக்குமார், நகர கழகம் புஷ்பா சர்வேஷ்  ஆகியோர் மீது பட்டிருக்கிறது. தஞ்சைக்கு மா.செ.வும் அமைச்சருமான வைத்திலிங்கமோ மாவட்ட கவுன்சிலர் பேராவூரணி அருள் நம்பி, ஜெயப்பிரகாஷ், கூட்டுறவு பால்சங்கத் தலைவர் காந்தி, பி.ஆர்.சி.முருகேசன், நீலகிரி ஊராட்சித்தலைவர் பரசுராமன், வழக்கறிஞர் தங்கப்பன் ஆகியோரை டிக் அடித்திருக் கிறார். விழுப்புரத்துக்கு மா.செ.லட்சுமணன் உளுந்தூர்பேட்டை வழக்கறிஞர் கண்ணன், முன்னாள் மாவட்ட சேர்மன் ராஜேந்திரன், ஜெ.’பேரவை முருகானந்தம், திருக்கோவிலூர் ஒன்றிய சேர்மன் அறிவழகன்,  தாட்கோ கண்ணன் ஆகியோரை பரிந்துரைக்க, கள்ளக் குறிச்சிக்கு அமைச்சர் மோகன், சங்கராபுரம் டாக்டர் காமராஜ், ஜெ.’பேரவை இளங் கோவன், கள்ளக்குறிச்சி ஒன்றிய சேர்மன் ராஜசேகர், சின்னசேலம் ஒன்றியசேர்மன் ராஜேந்திரன், வழக்கறிஞர் சீனிவாசன் ஆகியோரை டிக் அடித்திருக்கிறார். 

தென்சென்னைக்கு மாநில மாணவரணி எஸ்.ஆர். விஜயகுமாரையும், ஆதி.ராஜா ராமையும் மா.செ.கலைராஜன் பரிந்துரைக்க,  வடசென்னைக்கு மா.செ.பாலகங்காவோ,  ஜெ.பேரவை ஆர்.டி.சாம்சன், அரசு வழக் கறிஞர் ஜெகன், ஜெ.’பேரவை ராஜேஷ், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, வெற்றி நகர் சுந்தர் ஆகியோரை ஓ.கே.பண்ணியிருக்கிறார். மத்திய சென்னைக்கு மா.செ.பாலகங்காவும், கலைராஜனும் ‘ மாநில கூட்டுறவு வங்கி சேர்மன் கிரிநாத், சேப்பாக்கம் பகுதிச் செயலாளர் வி.கே.பாபு (எ) அப்துல்கரீம் ஆகியோரை டிக் அடித்திருக்கின்றனர்.

அமைச்சர் ரமணாவோ திருவள்ளூ ருக்கு  எக்ஸ் எம்.எல்.ஏ. பலராமன், எம்.ஜி.ஆர். பேரவை செம்பை சம்பத்குமார், வழக்கறிஞர் சௌந்தரராஜன் ஆகியோரை பரிந்துரை பண்ண இதே தொகுதிக்கு அமைச்சர் மாதவரம் மூர்த்தி எம்.ஜி. ஆர்.மன்ற தெற்கு மா.செ. மனோகரன், புழல் ஒ.செ.சுப்பிரமனியம் ஆகியோரை ரெகமண்ட் பண்ணியிருக்கிறார்.

நாகைக்கு மா.செ.வும் அமைச்சரு மான ஜெயபாலோ முன்னாள் டெல்லி பிரதிநிதி அசோகன், வழக்கறிஞர் அறிவழகன், குணசேகரன், கல்வியாளர் கனிமொழி ஆகியோரை பரிந்துரைக்க, சேலத்திற்கு மா.செ.செல்வராஜோ, வழக்கறிஞர் ஐயப்பனையும், கவுன்சிலர் ஏ.கே.எஸ்.பாலுவையும் டிக் அடித்திருக்கிறார். நீலகிரிக்கு ஊட்டி நகராட் சித் தலைவர் சத்தியபாமா, மாணவரணி சரவணன், எம்.ஜி.ஆர். மன்ற சம்பத், மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகி சாந்தா ஆகியோரை மா.செ அர்ச்சுனன் பரிந்துரை பண்ணியிருக்கிறார்.

கடலூருக்கு மா.செ.வும் அமைச்சரு மான எம்.சி.சம்பத்,  இளம்பெண்கள் பாசறை டாக்டர் கவிதா, கடலூர் மே. மா.செ. அருள்மொழித்தேவன், மாஜி தாமோதரன், எக்ஸ் எக்ஸ் எம்.எல்.ஏ.  ஐயப்பன்  ஆகியோரையும், சிதம்பரம் தொகுதிக்கு,  மாஜி துணை சபா வரகூர் அருணாச்சலம், டாக்டர் சீனிவாச ராஜா, டாக்டர் மகாலிங்கம் ஆகியோரையும் பரிந்துரை பண்ணி யிருக்கிறார். 

வேலூருக்கு மா.செ.ஏழுமலை, அப்பு (எ) ராதாகிருஷ்ணனையும், முன்னாள் மா.செ. வாசுவையும் பரிந்துரைத்துவிட்டு, தன் பெயரை யும் அழுத்தமாகக் குறிப்பிட்டிருக் கிறார். அரக்கோணத்துக்கு முன் னாள் எம்.பி. கோபாலையும் எக்ஸ் எம்.எல்.ஏ. பவானி கருணாகரனையும் பரிந்துரை பண்ணியிருக்கிறார் மா.செ.வான அப்பு. 

ஆரணிக்கு மா.செ.வும் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியின் பரிந்துரைப் பார்வை, ஜெ.’ பேரவை சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் கருணாகரன், பாஸ்கர், மாஜி மந்திரி வி.சண்முகத்தின் சகோதரரான ராதாகிருஷ்ணன் ஆகியோர் பக்கம் இருக்கிறது. திருவண்ணாமலைக்கு மாஜி ராமசந்திரன், துரிஞ்சாபுரம் ஒ.செ. ஜெயப் பிரகாஷ், தட்சணாமூர்த்தி, ராஜேந்திரன் ஆகியோ ரின் பெயர்கள் மா.செ.பாலசந்திரனின் கடிதத்தில் இடம் பிடித்திருக்கிறது.

நாமக்கல்லுக்கு மா.செ.வும் அமைச்சருமான தங்கமணி, மாவட்ட ஊராட்சித்தலைவர் காந்தி முருகேசன், எக்ஸ் எம்.எல்.ஏ. பி.ஆர் சுந்தரம் ஆகியோரை ஆதரித்திருக்கிறார். ஈரோடு தொகுதிக்கு மா.செ.வும் அமைச்சருமான கே.வி.ராமலிங்கமோ, மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, சிவகுமார், சென்னிமலை ஒ.செ.மணிமேகலை, பாசறை பழனிவேல், கன்னிவாடி ரமேஷ் ஆகி யோரை பரிந்துரை பண்ண... நெல்லைக்கு எம்.ஜி.ஆர். மன்ற ஆதித்தன், மாணவரணி ஜெரால்ட், மாவட்ட அவைத்தலைவர் அண்ணாமலை, ஜெ.பேரவை சுதா பரமசிவன், மாஜி சபா பி.ஹெச்.பாண்டியன் (அ) சிந்தியா பாண்டியன் என்று மா.செ. முத்துக்கருப்பன் பரிந்துரைத்திருக்கிறார். தூத்துக்குடிக்கு மேயர் சசிகலா புஷ்பா, பாசறை மனோகரன், மாஜி நகரம் அமிர்த கணேசன், வடமலை பாண்டியன், எக்ஸ் எம்.எல்.ஏ. வி.பி.ஆர்.ரமேஷ் ஆகியோரின் பெயர்கள் மா.செ.சண்முகநாதனால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  ராமநாதபுரத்துக்கு ஸ்டாலின் ஜெயச் சந்திரன், மாஜி அன்வர்ராஜா, ஆனிமுத்து, டாக்டர் மணிகண் டன் ஆகியோர் பெயர்களை மா.செ. முனியசாமி டிக் அடிக்க, குமரி மா.செ.வான சிவ.செல்வ ராசனோ மாஜி தளவாய் சுந்த ரம், ஜான் தங்கம், ஞானசேகரன், தொழிற்சங்க மா.செ காரவிளை செல்வம், எக்ஸ் எம்.எல்.ஏ. நாஞ்சில் வின்செண்ட், மத்தியாஸ் ஆகியோரை நாகர்கோவிலுக்கு பரிந்துரை செய்துள்ளார். 

தென்காசி தொகுதிக்கு எழுதிய பரிந்துரைக் கடிதத்தில் மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் பாலசுப்ரமணியன், மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், முருகையா, பாசறை சின்னதுரை, எக்ஸ் எம்.பி. முருகேசன், மாணவரணி அருண்ராஜ், தொழிலதிபர் ஜெய்சங்கர் என ஒரு பெரிய படையையே பரிந்துரை பண்ணியிருக்கிறார் மாவட்டம் முருகையா பாண்டியன்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ விருதுநகருக்கு வழக்கறிஞர் கணேசமூர்த்தி, மாஜி மா.செ.ராதாகிருஷ்ணன், மறைந்த மாஜி சபா.காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை, முன்னாள் தேர்தல் கமிஷன் அதிகாரி பழனிச்சாமி, கண்ணன், சுப்பிரமணியன், மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் மயில்சாமி, தே.மு.தி.க.வில் இருந்து வந்த மாஃபா.பாண்டியராஜன் என தானும் ஒரு பெரிய பட்டியலை கார்டனுக்கு அனுப்பியிருக்கிறார்.

சிவகங்கைக்கு மாஜி கண்ணப்பன், மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர் முருகானந்தம், மாஜி மா.செ.உமாதேவன், எம்.ஜி.ஆர். மன்ற மா.செ.பாண்டி, சாக்கோட்டை சின்னையா ஆகி யோரின் பெயர்கள் பரிந்துரைக் கப்பட்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதூருக்கு அமைச்சர் மாதவரம் மூர்த்தி, தனது மகன் கண்ணதாசனை பரிந்துரைக்க, மா.செ.விருகை ரவியோ, மதுரவாயல் தொகுதிச் செயலாளர் ஜீவாவையும், கே.என்.ராமச்சந்திரனையும் ரெகமண்ட் பண்ணியிருக்கிறார்.

திருப்பூருக்கு மா.செ. எம்.எஸ்.எம். ஆனந்தனும் புறநகர் மா.செ.உடுமலை ராதாகிருஷ்ணனும் இணைந்து அரசு கேபிள் கார்ப்பரேசன் தலைவர்களில் ஒருவரான உடுமலை ராதாகிருஷ்ணனையும் திருப்பூர் துணை மேயர் குணசேகரனையும் மத்திய கூட்டுறவு வங்கி சேர்மன் கிருஷ்ணராமையும் நகர வைஸ் சேர்மன் சத்யபாமாவையும் பரிந்துரை செய்துள்ளனர்.

கோவைக்கு அமைச்சர் தாமோதரனும் மா.செ.வான செ.ம.வேலுச்சாமியும் இணைந்து வழக்கறிஞர் ஆறுமுகம், மாநகர மண்டலத் தலைவர் ஜெயராமன் ஆகியோர் பெயரை சிபாரிசு செய்துள்ளனர்.

காஞ்சிபுரத்துக்கு மா.செ.வாலாஜா கணேசனும் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரனும் இணைந்து 5 பேரை சிபாரிசு செய்துள்ளனர். அவர்கள் இளைஞரணி அத்திவாக்கம் ரமேஷ், ஒன்றியப் பெருந்தலைவர் சம்பத்குமார், தும்பவனம் ஜீவா, எஸ்.எஸ்.ஆச்சார்யா, மாஜி சேர்மன் கோபி கண்ணன் ஆகியோர் ஆவர்.

பெரம்பலூருக்கு மா.செ.ரவிச்சந்திரனும் புறநகர் மா.செ.ரத்தினவேலுவும் அமைச்சர் பூனாட்சியும் சேர்ந்து எக்ஸ் எம்.எல்.ஏ.கே.கே. பாலசுப்ரமணியம், மேட்டுக்குடி லோகநாதன், அரசு வழக்கறிஞர் அசோகன், எக்ஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் தங்கவேலு, எக்ஸ் எம்.எல்.ஏ. ரத்தினவேல் ஆகியோரைப் பரிந்துரைக்க...

கரூருக்கு அமைச்சரும் மா.செ.வுமான செந்தில்பாலாஜி, சிட்டிங் எம்.பி. தம்பித்துரை, எக்ஸ் ஒ.செ.ரெயின்போ பாஸ்கர், கவுன்சிலர் நெடுஞ்செழியன், தொழி லதிபர் அட்லஸ் நாச்சிமுத்து ஆகியோரை பரிந்துரைத்திருக்கிறார்.

திருச்சிக்கு மாவட்டம் மனோ கரன் பரிந்துரைத்த பட்டியலில் மாநில பாசறை செயலாளர் குமார் எம்.பி. ஜெ. பேரவை சீனிவாசன், மாவட்ட இளைஞரணி பத்மநாபன், வழக்கறிஞர் ராமநாதன் ஆகி யோரின் பெயர்கள் இடம்பிடித் துள்ளன. பொள்ளாச்சிக்கு மா.செ.வும் அமைச்சருமான தாமோதரன் பரிந்துரைத்திருக்கும் கடிதத்தில், நகர சேர்மன் கிருஷ்ணகுமார், நகரம் வி.பி.கிரி, இளைஞரணி விஜயகுமார், தொழிற்சங்க குருசாமி ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன.

மயிலாடுதுறைக்கு அமைச்சரும், மா.செ.வு மான ஜெயபால் பரிந்துரைப்பது மருத்துவரணி ஸ்டாலின் ராமமூர்த்தி, எக்ஸ் எம்.எல்.ஏ. விஜய பாலன், எக்ஸ் எம்.எல்.ஏ. ரங்கநாதன் ஆகியோரை.

புதுவைக்கு மாநில அன்பழகனும் மாநில நிர்வாகி ஓம்சக்தி சேகரும் இணைந்து முன்னாள் அர்பன் வங்கி சேர்மன் பாண்டுரங்கம், மாநில நிர்வாகி ரவீந்திரன், வெங்கடசாமி, காங்கிரஸில் இருந்து வந்த காரைக்கால் கணபதி ஆகியோரை பரிந்துரைத்துள்ளனர்.

இந்த பட்டியல்களை கார்டன் கவனமாகப் பரிசீலித்து வருகிறது. விரைவில் அ.தி.மு.க. நாடாளுமன்ற வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படலாம்.

ad

ad