புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2013

ஜுவனிதாநாதன்அவர்கள்லிபரல்கட்சிவேட்பாளர்நியமனத்திற்கு போட்டியிட தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

யோர்க் பிராந்திய கல்விச்சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், கடந்த பத்து வருட காலமாக மார்க்கம்- தோர்ன் ஹில் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டவருமா ன  ஜுவனிதா நாதன்  புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மார்க்கம் – தோர்ன்ஹில் தொகுதிக்கான
லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனதிற்கு தான் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
தான் இத்தொகுதியின் லிபரல் கட்சியின் பாரளுமன்ற வேட்பாளரக தெரிவு செய்யப்படுவதன் மூலம், தொடர்ந்து இத்தொகுதி மக்களுடன் சேர்ந்து பலம் வாய்ந்த சமூக கட்டமைப்பை உருவாக்க ஏதுவாக இருக்கும் என்று கூறினார்.  மேலும், வரும்  2014 அக்டோபர் மாததுடன் தனது யோர்க் பிராந்திய  கல்விச்சபை உறுப்பினர் பதவி காலம் நிறைவு அடைவதாகவும் குறிப்பிட்டார்.
யோர்க் பிராந்திய  கல்விச்சபை உறுப்பினரான நாதன் அவர்கள் பெற்றோரின் பங்களிப்பை பாடசாலைகளிலும், சமூக சந்திப்புகள் மற்றும் பற்பல பயிற்சி பட்டறைகள் மூலம் அதிக்கரித்துள்ளதோடு, இவர் தன்னை சமூக சேவைக்காக அர்பணித்தமைக்காக  இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் வைர விழா விருதினை பெற்றுள்ளார்.  அத்துடன் இவர் யோர்க் மற்றும் சிம்கோ கனடிய மனநல கழகம், யோர்க் பிராந்திய ஒப்புரவு சபை, மற்றும் கனடிய தமிழர்  பேரவை ஆகியவற்றின் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் சேவையாற்றி உள்ளார்.
ஜுவனிதா நாதன் யோர்க்  பிராந்திய கல்விச்சபையின் உறுப்பினராகவும், சமூகங்களுக்கிடையேயான இளைஞர் வெளிக்கள பணியாளராகவும், முதியோருக்கு உதவும் பணியாளராகவும், வன்முறைகளுக்குள்ளான பெண்களின் மனநல ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகின்றதுடன் இவர் முதியோர், இளைஞர் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கை முறையில் முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்துவதிலும் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.
புரொக் பல்கலைகழகத்தில் இளநிலை உளவியல் பயின்றுள்ள இவர், சட்டதுறை அமைச்சின் கீழ் குடும்ப வன்முறை  சம்பந்தமான விசேட திட்டமொன்றின் கீழும்  பணியாற்றி உள்ளார், தற்போது யுத் லிங் என்னும் இளையோர் தொடர்பாடல், மற்றும்  யோர்க் பிராந்திய  குடும்ப சேவை மையம் ஆகிய அமைப்புகளில் பணியாற்றி வருகின்றார்.
நாதன் அவர்கள், 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற யோர்க் பிராந்திய கல்விச்சபைக்கான தேர்தலில் ஆராயிரத்திற்கும் மேற்ப்பட்ட   வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், இப்பிராந்தியத்தில் அனைத்து கல்விச்சபை உறுப்பினர்கள் இடையே  அதிகூடிய வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad