புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 அக்., 2013

வடமராட்சி கிழக்கில் ஈபிடிபியினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும்!- பொ.ஐங்கரநேசன்
வடமாராட்சி கிழக்கில் ஈ.பி.டி.பி யின் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்ததுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடமாகாண விவசாய, கால்நடைகள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட பாரவூர்தி உரிமையாளர் சங்கத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது இயற்கை வளங்கள் கடந்த காலத்தில அளவுக்கு அதிகமான முறையில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இதனால் யாழ்ப்பாண நீர் மாசடைந்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் வரமான நீருடன் கடல் நீர் கலக்கின்றது. நீரில் அதிகளவு நச்சு தன்மை ஏற்படுகின்றது. இவை அனைத்தும் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
வடமாரட்சி கிழக்கில் ஈ.பி.பி.டி யின் மகேஸ்வரி நிதியம் பாரிய மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இதனை நாங்கள் தடுத்து நிறுத்துவோம்.
உண்மையில் ஒரு இயற்கை வளத்தினால் அந்த பகுதி மக்கள் பயனடைய வேண்டும். ஆனால் வடமாராட்சி கிழக்கில் உள்ள வளத்தை ஒரு நிறுவனம் சுரண்டித் தின்கின்றது.
அது தொடர்பான தகவல்களை சேகரித்தவர்கள் கூட கடந்த காலத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே மீண்டும் அனைத்து லொறிகளும் வடமராட்சி கிழக்கிலிருந்து மணலை ஏற்றிவர நடவடிக்கை எடுப்போம் என்றார்.

ad

ad