புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!

ஹரி ஆனந்தசங்கரி எதிர்வரும் பாராளுமன்றத் தர்தலில் போட்டியிட முடிவு!
திரு ஹரி ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத்
தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத்
தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
கடந்த புரட்டாதி மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதி

தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்தே.
அப்புதிய எல்லைகளின்படி, ஹரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த
தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough—Rouge River) தொகுதி தற்போது
ஸ்காபொரா வடக்கு (Scarborough North) மற்றும் ஸ்காபொறோ ரூஜ் பார்க்
(Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும்
நாட்களில் அறிவிக்கவுள்ளார்.
இப் பகுதியில் லிபரல் (Liberal) கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு
போட்டியிடவுள்ளது பற்றி திரு ஹரி ௬றும்போது, தான் இந்தத் தொகுதியில்
பல ஆண்டுகள் வாழ்ந்து, சேவை புரிந்து, தனது சட்ட நிறுவனத்தை நிறுவி
தொழில் புரிவதைச் சுட்டிக் காட்டி, இத் தொகுதி மக்களுடன் தொடர்ந்தும்
இணைந்து செயலாற்றக் கிடைத்துள்ள இந்த மிக அரிய சந்தர்ப்பத்தையிட்டு
தான் மிகவும் உற்சாகமைடந்துள்ளதாகவும் ௬றினார்.
தனது இளம்பிராயம் முதல் சமூகப் பணிகளில் தன்னை இணைத்துக்
கொண்ட ஹரி அவர்கள், கார்ள்டன் பல்கைலக்கழகத்தில் (Carleton University)
மாணவத் தைலவராக இருந்து பல்கைலக்கழக மாணவர்களின் கல்வி
உரிமைக்காகக் குரல் கொடுத்தேதாடு, கனடிய தமிழர் இளையோர்
முன்னேற்ற நடுவத்தின் (The Canadian Tamil Youth Development Centre – CanTYD)
தலைவராகவும், கனடிய தமிழர் வர்த்தகச் சம்மேளனத்தின் (Canadian Tamil
Chamber of Commerce) தலைவராகவும் இருந்த போது பெற்ற அனுபவங்கைள
வைத்து, கடின உழைப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் இத்தொகுதி
மக்களுக்குச் சேவயாற்ற விரும்புவதாகவும் ௬றினார்.
கார்ள்டன் பல்கைலக்கழகத்தில் அரசியல் இளமானிப் பட்டத்தைப் பெற்று,
பின்னர் ஒஸ்குட் சட்டக் கல்லூrயில் (Osgoode Hall Law School) சட்ட
இளமானிப் பட்டத்தையும் பெற்றுள்ள திரு ஹரி அவர்கள் ஸ்காபொறோவில்
சட்டத் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றான ஹரி
ஆனந்தசங்கரி அசோசியேற்ஸ் (Gary Anandasangaree and Associates Professional
Corporation) நிறுவனத்தின் தலைவராக உள்ளதுடன் கனடியத் தமிழர்
பேரைவயின் (Canadian Tamil Congress) சட்ட ஆேலாசகராகவும், யுத் சலன்ச்
பண்ட் (Youth Challenge Fund) நிதியத்தின் இயக்குனராகவும்,
காவல்துறை தலைமை அதிகாரியின் ஆலோசைனக் குழு உறுப்பினராகவும்
செயற்பட்டு வருகின்றார்.
அத்தோடு, திரு ஹரி அவர்கள் பல ஆண்டுகளாக மனித உரிமைச் சட்ட
வல்லுனராகவும், மனித உரிமை செயற்பாட்டாளராகவும் இருப்பதுடன்,
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தனது நேரடியான
செயற்பாடுகளினூடாக சர்வேதச நீதிக்காகக் குரல் கொடுத்தும் வருகின்றார்.
டொராண்டோ பல்கைலக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் இளமானிப்
பட்டம், ஒஸ்குட் சட்டக் கல்லூrயில் சட்ட இளமானிப் பட்டம், மகில்
பல்கைலக்கழக (McGill University) முதுமானிப் பட்டம் பெற்று, தற்போபாது யோர்க்
பல்கைலக்கழகத்தில் (York University) சட்டம் மற்றும் சமூகத் துைறயில்
கலாநிதி (PhD) பட்டப் படிப்பில் ஈடுபட்டிருக்கும் ஹரினி சிவலிங்கம்
அவர்கைள திருமணம் புரிந்துள்ள திரு ஹரி அவர்கள் பைரவி மற்றும்
சஹானா ஆகியோரின் தந்தையுமாவார்.
மேலதிக தகவல்களுக்கும் நேர்காணல்களுக்கும்:
ஹரி ஆனந்தசங்கரி: 416-564-9991

ad

ad