புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 அக்., 2013




          ருதலைக் காதலன் சுரேஷின் ஆசிட் வீச்சால் படுகாய மடைந்தார் இன்ஜினியரிங் மாணவி காரைக்கால் வினோதினி.


வினோதினி பற்றிய உள்ளத்தை உருக்கும் தகவல் களை அட்டைப்படச் செய்தி யாக்கி உலகம் முழுக்க தமிழர் களிடம் முதலில் கொண்டு சென்றது -நக்கீரன்.

வினோதினியை காப்பாற்றுவதற்காக கோடிக்கணக்கில் நிதியளித்தார்கள் தமிழர்கள். நக்கீரன் வாசகர்களே பல லட்ச ரூபாயை காசோலை யாகவும் ரொக்கமாகவும் கொடுத்தனர். அதை நாமே வினோதினியின் பெற்றோரிடம் கொடுத்தோம்.

ஆயினும் சிகிச்சைகளால் வினோதினியைக் காப்பாற்ற முடியவில்லை. மூன்று மாதங்கள் உயிரோடு போராடிய வினோதினி 12.2.13 அன்று இறந்தார்.

வினோதினியின் சிகிச்சைக்கு செலவானது போக மீதி 46 லட்ச ரூபாய் இந்தியன் வங்கியின் சென்னை கீழ்ப்பாக்கம் கிளையில் இருப்பு வைத்திருப்பதாகச் சொன்னார்கள் வினோதினியின் பெற்றோர்.

இந்த நிலையில்தான் மகள் வினோதினியின் நினைவோடு வாழ்ந்த தாய் சரஸ்வதி 5.10.13 அன்று விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்ட செய்தி வந்தது. விசாரணையில் இறங்கினோம்.

வினோதினியின் தந்தை ஜெயபாலனோ, ""பொண்ணு போன இடத்துக்கே போயிடணும்னு எப்பப் பார்த்தாலும் புலம்பிக் கொண்டே இருந்தாள். அன்றைக்கு டீ போடப் போனவள்தான்... என்மீது வந்து தலைகுப்புற விழுந்தாள். ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு ஓடினேன். பிழைக்கலை!'' -முணுமுணுத்தார் ஜெயபாலன்.

வினோதினியின் உறவினர்களோ ""சதா சர்வகாலமும் போதையில் மிதக்கும் ஜெயபாலன் கொடுத்த டார்ச்சர்தான் அந்த அம்மா தற் கொலைக்கு காரணம். ஆசிட் வீசிய சுரேஷ் உனக்கு வாங்கித் தந்த பாட்டில் தானே எல்லாத் துக்கும் காரணம்னு அவுங்க சொல்வாங்க. அதை காதில வாங்கிக்காம சதா குடிப்பாரு. இதைப் பயன்படுத்திக் கொண்டு சென்னையில் இருந்து வந்து அந்த ரமேஷ் அடிக்கடி பணத்தைக் கறந்து கொண்டு போனார். ஜெயபாலும் தம்பி ரமேஷும் சேர்ந்து கொடுத்த டார்ச்சர் தாங்கா மல்தான் மருந்தை குடிச்சுட்டாங்க!'' என்றார்கள்.

உறவினர்கள் சந்தேகத்தை ரமேஷிடம் சொன்னோம்.

""சேச்சே... வினோதினிக்காக அறக்கட்டளை ஆரம்பிக்கச் சொன்னதே நான்தான். நான் தப்புச் செய்வேனா?'' என்று வேதனையைக் காட்டினார்.

இந்தியன் வங்கிக்கிளை மேலாளரோ ""வினோதினி பெயரில் எந்த அறக்கட்டளை அக்கவுண்ட்டும் எங்கள் கிளையில் இல்லை'' என்கிறார்.  பொறையார் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாரிடம் கேட்டோம்.

""40 லட்சத்திற்கும் மேல் ஜாயிண்ட் அக்கவுண்ட்ல கிடக்கு. ஜாயிண்ட் அக்கவுண்ட் பணத்தை எடுப்பதற்காக, தினசரி அந்த அம்மா ளிடம் கையெழுத்துக் கேட்டு டார்ச்சர் செய்திருக் கிறார். அதனால்தான் அந்த அம்மா விஷத்தை குடித்திருக்கிறார்!'' என்கிறார் ஆய்வாளர்.

ஒருதலைக் காமவெறியால் வினோதினியை ஆசிட்டால் கொன்றான் சுரேஷ்.

குடிபோதைக்காக டார்ச்சர் செய்து வினோதினியின் அம்மா சாவுக்கு காரணமாகி யிருக்கிறார் வினோதினியின் அப்பா.

ad

ad