புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 டிச., 2013


எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலின் பின்னர் நிச்சயமாக தானே முதலமைச்சர் என ஜே.வி.பியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி.லால்காந்த நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களை அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகையாக அரசாங்கம் நடத்த உள்ளது.

வடமேல் மாகாண சபைத் தேர்தலை போன்று தனிமைப்படுத்தப்பட்ட தேர்தலாக இந்த தேர்தலை ஜே.வி.பி கருதவில்லை.
அரசாங்கத்தின் திட்டத்தை கவனத்தில் கொண்டு மாகாண சபை, பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகிய மூன்றையும் ஒன்றாக கருதி ஜே.வி.பி செயற்பாடுகளை முன்னெடுக்கும்.
அரசாங்கத்திற்கு எதிரான வாக்காளர்களின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்தி அரசாங்கத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைப்பதே ஜே.வி.பியின் திட்டம்.
இதன் மூலம் கிடைக்கும் உத்வேகத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபகஷவை தோற்கடிக்கும் ஆரம்பத்தை பெற்றுக்கொள்ள போவதாக லால் காந்த கூறியுள்ளார்.

ad

ad