புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013


அழைப்பின் பேரில் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார் வைகோ: ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம்? தமிழருவி மணியன்
 

சென்னையில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் செய்தியாளர்களை திங்கள் கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 
இரண்டு திராவிட கட்சிகளின் முற்றுகையில்தான் தமிழகம்
சிக்கி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதற்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நான் நினைத்தேன்.

எனவே முதலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஜெயலலிதா போயஸ் தோட்டத்து கதவை மூடிவிட்ட அடுத்த கனமே, ஒரு பக்கம் ஜெயலலிதா கதவை மூடிவிட்டார். ஆனால் இன்னொரு பக்கம் திமுக தலைவர் கலைஞர் கதவை திறந்து காத்திருப்பார் என்பதை நான் அறிவேன். 
ஜெயலலிதாவிடம் செல்ல முடியாத பாஜக, கலைஞரின் பக்கம் சென்றுவிடக் கூடாது என்பதற்காக தனியாக தேர்தல் களத்தில் நின்றால் மோடி அலையை மட்டுமே பயன்படுத்தி பாஜக பெருவெற்றியை பெறமுடியாது என்ற அவநம்பிக்கையில், ஜெயலலிதா கதவை மூடிவிட்ட சூழலில் கலைஞரோடு தேர்தல் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று பாஜகவின் அகில இந்திய தலைமை முடிவுக்கு வந்துவிடக்கூடாது. 
அதற்காக வலிமைமிக்க ஒரு மாற்று அணியை அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப உருவாக்கினால் இரண்டு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்தும் விடுபட்டு அவர்கள் ஒரு மாற்று அணியை உருவாக்கு வார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த வியூகம் அமைக்கப்பட்டது.,
முதல் முதலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை சந்தித்து விவாதித்தேன். பாஜகவோடு தமிழகத்தில் முக்கிய கட்சிகள் கூட்டணி வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே திமுக, அதிமுக, மதிமுக, பாமக போன்ற கட்சிகள் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளன. அதிகாரத்தை பகிர்ந்துகொண்டிருக்கின்றன. 
எனவே இவர்கள் மதவாதம் என்கிற அடிப்படையில் ஒரு தீண்டத்தகாத கட்சியாக சொல்லுவதற்கு வாய்ப்பு இல்லை. இன்னொன்று நடந்து முடிந்த சில தவறுகளை திரும்ப திரும்ப நினைவுப்படுத்திக்கொண்டே இருப்பதன் மூலம், இந்துக்களையும் முஸ்லீம்களையும் இரண்டு வெவ்வேறு கொண்ட வாக்குவங்கிகளாக தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துகின்ற நிலை மாற்றப்பட வேண்டும். இந்துவும் முஸ்லீமும் இணக்கமான ஒரு சமூகத்தை சந்திப்பதற்கு பாஜகவின் தலைமையில் அமையக் கூடிய இந்த அணி மதசாயமும், சாதிச்சாயமும் இல்லாததாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த அணியை அமைப்பதற்கான முயற்சியை நான் மேற்கொண்டேன். 
எனவே வைகோவிடம் நடத்திய நீண்ட விவாதத்திற்கு பிறகு, பாஜக முன்வந்து அவர்களாக எங்களுக்கு அழைப்பு கொடுத்தால், அவர்களுடைய அகில இந்திய தலைமை சார்பாக முக்கியமான தலைவர்கள் யாராவது என்னை வந்து சந்தித்து, ஆதரவு கேட்டால் அதற்கு பிறகுதான் நான் பாஜக அணியில் இருப்பதற்கு சம்மதிப்பேன் என்று அவர் தெளிவுப்படுத்தினார்.
அதற்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணனிடம் வைகோவின் நிலையை விளக்கினேன். அதன் விளைவாக பாஜகவைச் சேர்ந்த முரளிதரராவ், வைகோ நேரில் சந்தித்தார். வைகோவும் அவரும் நீண்ட நேரம் விவாதித்தார்கள். வைகோவுக்கு இருக்கும் சந்தேகத்திற்கு அனைத்திற்கும் முரளிதரராவ் விளக்கம் கொடுத்தார். அந்த சந்திப்புக்குப் பின்னர்தான் டெல்லியில் ராஜ்நாத் சிங்கை வைகோ சந்திப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அழைப்பின் பேரில் ராஜ்நாத் சிங்கை வைகோ சந்தித்தார். 
எப்படியாவது பாஜகவோடு ஒரு உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று வலிந்து வைகோ எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முறையாக அழைப்பு வந்தது. 
பாஜகவைச் சேர்ந்த இரண்டு பேர் இரண்டு விதமான செய்திகளை சொல்லியிருக்கிறார்கள். ராஜ்நாத் சிங்கை வைகோ சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று. இந்த போக்கு பாஜகவில் நீடிக்கக் கூடாது. இப்போது வைகோ ராஜ்நாத் சிங்கை மரியாதை நிமித்தமாக சந்திப்பதற்கு எந்தவிதமான சூழலும் கிடையாது. தேர்தல் வருகிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒருவரையொருவர் சந்தித்து பேசுகின்றனர். எனவே இந்த தேர்தலுக்கான கூட்டணி குறித்தான் அவர்கள் பேசியிருக்க முடியும். இதை ஒப்புக்கொள்வதில் என்ன தயக்கம் பாஜகவுக்கு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. 
மோடியை ஆதரித்து ஒரு அணி அமைக்கப்பட வேண்டியது அவசியம். அதற்காக அனைத்து வேலைகளும் மூடி மூடி நடக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் நான் முதல் கட்டமாக நான் சொல்வது, வைகோ அழைப்பின் பேரில் சென்றார். ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவர் பேசிவிட்டு வந்திருக்கிறார். இதுஒரு பக்கம். 
இரண்டாவது ஆஸ்திரேலியாவுக்கு நான் புறப்படுவதற்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாசை சந்தித்தேன். என்னைப் பொறுத்தவரையில் நான் 45 ஆண்டு காலமாக அரசியல் களத்தில் இயங்கி வருகிறேன். மூன்றாவது அணி என்று ஒன்று அமைந்தால், அதன் பக்கம் வாக்காளர்கள் முகம் திருப்புவது கிடையாது தமிழ்நாட்டில். 
காரணம். திமுக, அதிமுகவால் நிராகரிக்கப்பட்ட சில உதிரி கட்சிகள் தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாக ஒரு அணியை அமைப்பார்கள். அந்த அணிக்கு வரக்கூடிய வாக்குகளை கூட்டிப்பார்த்தால் 10 விழுக்காடு கூட இருக்காது. எனவே அது தேராத அணி என்று வாக்காளர்கள் முடிவெடுத்து அந்த அணியை ஒதுக்கிவிடுவார்கள். அந்த சூழ்நிலை பாஜக அணிக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், நான் ஒவ்வொன்றாகத்தான் கணக்குப் போட்டு பார்த்தேன். 
பாஜக தமிழகத்தில் வாங்கியிருக்கக் கூடிய அதிகபட்ச வாக்குகள் மூன்று விழுக்காடு. ஆனால் மோடிக்கு தமிழகத்தில் ஒரு பெரிய அலை உருவாகி இருக்கிறது. அதில் மாற்றமே கிடையாது. நான் ஏசி அறையில் உட்கார்ந்து பேசுபவனோ, எழுபவனோ கிடையாது. ஆதரவு அலை என்பது ஒன்று. அந்த ஆதரவு அலையை வாக்குகளாக மாற்றுவது இன்னொன்று. அந்த சக்தி பாஜகவுக்கு வேண்டும்.

அதற்கு தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தேவை. மோடிக்கு தமிழகத்தில் 10 விழுக்காடு இருக்கின்றன. நான் ஆதாரங்களோடு சொல்லுகிறேன். தமிழகத்தில் 48 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். இளைஞர்கள். 48 லட்சம் பேரில் 5 விழுக்காடு கூட திமுக அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 48 லட்சம் பேர் என்பது தமிழகத்தில் ஏறக்குறைய 10 விழுக்காடு. இரண்டில் இருந்து மூன்று விழுக்காடு திசை மாறினாலே தேர்தல் முடிவு தலைகீழாக மாறிவிடும். 
தமிழகத்தில் மோடிக்கு 10 விழுக்காடு வாக்குகள் இருக்கிறது. வைகோ மேல் தமிழகத்தில் உள்ள கனிசாமான மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. எனவே இரண்டு திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்கவே இந்த முயற்சி என்றார்.

ad

ad