புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 டிச., 2013

தி.மு.க. ஏற்கனவே எங்களை விட்டு வெளியேறி விட்டது: ஞானதேசிகன் பேட்டி
 
தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் சத்திய மூர்த்தி பவனில் திங்கள்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
தி.மு.க. பொதுக்குழுவில் காங்கிரஸ் மீது இழிவுபடுத்தி உள்ளனர்.
அவதூறாக பேசி உள்ளனர். ‘2ஜி’யை காரணம் காட்டி கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்து உள்ளனர். தி.மு.க. வெளியேறியதால் எங்களுக்கு வருத்தம் இல்லை.

‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் துரோகம் செய்து விட்டதாக கூறுவது தவறு.
தி.மு.க. ஏற்கனவே எங்களை விட்டு வெளியேறி விட்டது. எனவே இப்போது பொதுக்குழுவில் எடுத்த முடிவால் வருத்தம் எதுவும் இல்லை. காங்கிரசை அவமானபடுத்தி பேசி இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.
தி.மு.க.விடம் ஆதரவு தாருங்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. கனிமொழி மேல்சபை தேர்தலில் போட்டியிட்ட போது எங்களிடம் தி.மு.க. ஆதரவு கேட்டது. சட்டமன்ற இடை தேர்தலிலும் ஆதரவு கேட்டது. இப்போது கூட்டணியை விட்டு வெளியேறியதாக அறிவிப்பது ஏன் என்று புரியவில்லை.
காங்கிரஸ் கட்சிக்கு தனித்து போட்டியிடும் பலம் இருக்கிறது. ஏற்கனவே பல தடவை தனியாக தேர்தலை சந்தித்து இருக்கிறோம். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

ad

ad