புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2014

இலங்கை விஜயத்தின் பொழுது தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டேன்!- ராதிகா சிற்சபேசன்
இலங்கையில் பிறந்த கனேடிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனின் (வயது 32) இலங்கை விஜயத்தின் பொழுது மோட்டார் சைக்கிள்களில் வந்த நபர்களினால் தொடர்ச்சியாக பின்தொடரப்பட்டதாக கனேடிய ஸ்டார் பத்திரிகைக்கு பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
முதலாவது மோட்டார் வண்டி ஓட்டுநரை தினசரி கூலி அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினரின் செயற்பாடுகளை கண்காணிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்டிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு பல நபர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக அந்நபர் ராதிகாவிடம் தெரிவித்துள்ளார்.
நான் தங்கியிருந்த விடுதியின் வெளிப்புறத்தே தொடர்ச்சியாக பலர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர் அத்துடன் என்னுடைய செயற்பாடுகள் பற்றி தொடர்ச்சியாக தகவல்களை பரிமாற்றிக் கொண்டிருந்தனர் என கூறினார்.
மார்கழி மாதம் 28ம் நாள் ராதிகா சிற்சபேசன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். 27 ஆண்டுகளுக்கு முன்னர் ராதிகாவின் குடும்பம் இலங்கையை விட்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தனர்.
என்டிபி கட்சியின் ஸ்காப்ரோ ரொப் ரிவர் பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ் மக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தினை விமர்சித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நான் தனிப்பட்ட விஜயமொன்றினையே இலங்கையிற்கு மேற்கொண்டேன. இதுவோர் அரசியல் பயணமன்று. நான் என் குடும்பத்தினரை காண்பதற்காகவும் சிறு பராயத்தில் நான் வாழ்ந்த ஒரு சில இடங்களை பார்க்கும் பொருட்டே இலங்கை சென்றேன்.
மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்தவர்களின் செயற்பாடுகள் சந்தேகத்திற்குரியதாகவே காணப்பட்டது.
புத்தாண்டு காலப்பகுதியில் அநாதைகளுக்கு உதவி செய்யும் பொருட்டு அநாதை இல்லங்களுக்கு விஜயம் செய்தேன்.
அச்சமயம் எனக்கோர் தொலைப்பேசி அழைப்பொன்று வந்தது அவ்வழைப்பை மேற்கொண்டவர் என்னை கைதுசெய்யும் பொருட்டு ஒரு சிலர் அவ்வில்லத்தின் பிரதான வாயிலில் காத்திருப்பதாக தகவல் வழங்கப்பட்டது. என்னை கைது செய்ய வேண்டிய தேவையெதுவும் அவர்களுக்கு இல்லை. ஆகையால் அவ்விடத்தில் வைத்து நான் கைதுசெய்யப்படவில்லை.
நான் என் தாத்தா பாட்டியின் பழைய வீட்டிற்கு விஜயம் செய்தேன். நாங்கள் முன்பு அவ்வீட்டில் தான் வசித்தோம். நான் என் விடுதிக்கு சென்றேன் பின்னர் என் இருப்பிடத்தை மாற்றினேன்.
மேலும் உடனடியாக நான் கனேடிய உயர் ஸ்தானிகராலயத்தையும் என்டிபி கட்சி தலைவர் தோமஸ் முக்லரே மற்றும் கட்சி வெளிநாட்டு அலுவலர் போல் டிவர் அவர்களையும் தொடர்புகொண்டேன்.
ஒரு சில மணித்தியாலங்கள் என் அறையில் முடங்கிக் கிடந்தேன். விடுதி அறையிலிருந்த திரைச் சீலைகளையேனும் நான் திறக்கவில்லை. ஏனெனில் என்னுடைய இருப்பிடம் பற்றி ஒருவரேனும் அறிந்திடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அத்துடன் என் மீதான பிடியாணை உண்மையானதா அல்லது போலியான ஒன்றா என்பதனை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் உறுதிப்படுத்தும் வரை காத்திருக்க நேரிட்டது.
மறுநாள் நான் என்னுடைய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழிற்சாலையொன்றுக்கு விஜயம் மேற்கொண்ட பொழுது என் ஆடையில் அழுக்குப்பட்டமையினால் ஆடையை மாற்றும் பொருட்டு தனியான இடத்திற்கு செல்ல நேரிட்டது. அப்பொழுது குடிவரவு அதிகாரிகளென அறிமுகம் செய்த 3 ஆண் அரச அதிகாரிகளினால் சூழப்பட்டேன்.
என்னை ஓர் தனியார் இடத்திற்கு வருமாறு அவர்கள் கூறினார்கள். அப்பொழுது வெளிநபர்கள் ஒருவரேனும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அவர்களுள் ஒருவர் கதவின் அருகே நின்றுகொண்டிருந்தார்.
என்னுடைய செயற்பாடுகள் பற்றியும் நான் சந்தித்த நபர்கள் பற்றியும் பட்டியலிட்டனர். குடிவரவு கட்டுப்பாட்டு கொமிஷனர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நாங்கள் உங்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய முயல்கின்றோம் அதற்காகவே உங்களை கண்காணிக்கின்றோம் என்றார்.
ராதிகா சிற்சபேசன் தொடர்ச்சியான இலங்கையினை விமர்சித்தாரென ஒட்டாவாவிலுள்ள இலங்கைத் தூதுவர் முன்னர் தெரிவித்தார். இது தொடர்பில் அவரை ஸ்டார் பத்திரிகை தொடர்புகொள்ள முயற்சித்த பொழுதிலும் அது பயனளிக்கவில்லை.
இலங்கை அதிகாரிகள் ராதிகா சிற்சபேசனை கௌரவமான முறையில் நடாத்தினார்கள். ராதிகாவினால் விடுக்கப்பட்ட அறிவிப்பு அரசியல் நோக்கின் அடிப்படையிலும் இலங்கையினை வெட்கப்படுத்தும் வகையில் அமைந்திருந்ததாக இலங்கை உயர்ஸ்தானிக இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கை பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் ராதிகா சிற்சபேசன் இலங்கையின் சமாதானச் சூழலிற்கு பங்கம் விளைவிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்காப்ரோ பகுதியில் வாழும் மக்களின் வாக்குகளை பெறும் பொருட்டு தாம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறியுள்ளாரென குறிப்பிடப்பட்டிருந்தது.
இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா, ராதிகாவை தமிழீல விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளரென குறிப்பிட்டிருந்தார். இவர் புலிகளின் கொள்கைகளை பரப்புகின்றாரென இலங்கையிலிருந்து வெளிவரும் டெய்லி நியூஸ் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
ராதிகா தமிழர் மீதுள்ள அன்பினால் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை. அவர் தமிழர்களின் வாழ்க்கை தொடர்பில் மற்றும் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கும் பொருட்டே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தான் எவ்வித அரசியல் நிகழ்வுகளிலும் பங்குக்கொள்ளவில்லையென ராதிகா உறுதிபடத் தெரிவித்துள்ளார். தனக்கு உதவிகளை செய்த வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஏனைய அனைவருக்கும் தன் நன்றிகளையும் தெரிவித்தார்.

ad

ad