புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 ஜன., 2014

ஒரு லட்சம் பேருடன் இணைந்து தேசப்பற்று பாடலை பாடுகிறார் லதா மங்கேஸ்கர்
மகாராஷ்டிராவின் மும்பை நகரில் மகாலட்சுமி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ஷாகித் கவுரவ் சமிதி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தேசப்பற்று பாடலின் 50ம் ஆண்டு பொன் விழா கொண்டாட்டம் நடைபெறுகிறது.  இதில், பாரத ரத்னா விருது பெற்ற திரை இசை பாடகியான லதா மங்கேஸ்கர் கலந்து கெள்கிறார்.


கடந்த 50 வருடங்களுக்கு முன்பாக 1962ம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போரில் கலந்து கொண்ட வீரர்களின் நினைவாக 1963ம் ஆண்டு ஜனவரி 27ந்தேதி அவர், ஏ மேரே வதன் கே லாகோன் என்ற தேசப்பற்று மிக்க இந்தி பாடலை பாடினார். 


தற்போது, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஒரு லட்சம் பேர் முன்னால் அவர் இந்த பாடலை பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர், பரம் வீர் சக்ரா விருது பெற்ற 100 பேர், மஹாவீர் சக்ரா மற்றும் பிற தைரிய விருதுகளை பெற்றவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.  அவர்கள் இந்நிகழ்ச்சியில் கவுரவிக்கப்படுகின்றனர்.

ad

ad