புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஒற்றையர் இறுதிப் போட்டியில், சீன வீராங்கனை லீ நா சாம்பியன் பட்டத்தை வென்றார்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகிறது.
இன்று பெண்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் தரவரிசையில் 4-ம் நிலை உள்ள சீன வீராங்கனை லீ நா, 20-ம் நிலை வீராங்கனை சிபுல்கோவாவை எதிர்கொண்டார்.

இதில் லீ நா எளிதில் வெற்றி பெற்று அவுஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றார்.
முதல் செட்டில் லீ நாவுக்கு, சிபுல்கோவா ஈடுகொடுத்து விளையாடியதால் போட்டி 'டை பிரேக்கர்' வரை சென்றது. டை பிரேக்கரில் 7-3 என லீ நா வெற்றி பெற்றார்.
முதல் செட் 'டை பிரேக்கர்' வரை சென்றதால் 2-வது செட் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் லீ நா அதிரடி தாக்குதலுக்கு சிபுல்கோவாவால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இதனால் லீ நா 6-0 என எளிதில் செட்டை கைப்பற்றி 2-0 என நேர்செட்டில் எளிதில் வென்றி சாம்பியன் பட்டம் வென்றார்.
இவருக்கு இது இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டமாகும்.

ad

ad