புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜன., 2014

நடுரோட்டில் மோதிக்கொண்ட சேலம் தி.மு.க வினர்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்க
வீரபாண்டியார் சிலை திறப்பிற்க்காகவும், ஜனவரி 25 சேலம் கோட்டை மைதானத்தில் மாலை நடக்க இருக்கும் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுகூட்டதிற்க்கு அனுமதி வாங்கவும் சேலம் மாவட்ட
தி.மு.க வினர் மாநகர போலீஸ் கமிசனர் அலுவலகத்திற்கு சென்றனர்.
அங்கே போலீஸ் கமிசனர் மகாலி ‘பொதுகூட்டதிற்க்கு மட்டும் அனுமதி கொடுத்தார்’. எனவே கோட்டை மைதானத்தை பார்வையிட மாவட்ட பொறுப்பாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், வீரபாண்டி ராஜா, பணமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் தனி தனி காரில் திரும்பினர்.
சங்ககிரி சாலையில் கே.எஸ் திரையரங்கம் அருகில் வந்தபோது ராஜா அணியினருக்கும், ராஜேந்திரன் அணியினருக்கும் அடிதடி ஏற்பட அந்த இடத்தில் வீச்சரிவாள்களோடு மோதல் முற்பட்டதாக கூறப்படுகிறது. 
இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வினர், ‘ராஜேந்திரன் ஆதரவாளர்களின்  கார் வீரபாண்டி ராஜா காரை முந்தி சென்றது. இதனால் ராஜாவின் கார் டிரைவர் அவர்களை திட்ட ராஜேந்திரன் ஆதரவாளர்கள் பதிலுக்கு திட்டினர். இந்த வாக்குவாதத்தின் போது அங்கே வந்த ராஜா ஆதரவாளரான சந்திரமோகன், ராஜேந்திரன் ஆதரவாளர்களை தாக்க அவர்கள் பதிலுக்கு தாக்கினர். இந்நிலையில் ராஜா மச்சானான குகை ரமேஷ், ராஜா காரில் இருந்து இறங்கி ராஜேந்திரன் ஆதரவாளர்களை ஒருமையில் பேசி தாக்க, அவர்களில் காட்டூர் ஆனந்தனும் துரத்தி துரத்தி ரமேஷை தாக்கி பதிலடி தர அந்த இடமே பயங்கரமாக இருந்தது. அதன் பின் அரிவாள் எடுத்து மிரட்டிகொள்ள அங்கே திரும்பிய பணமரத்துப்பட்டி ராஜேந்திரன் தன் ஆதரவாளர்களை சமாதானம் செய்து வண்டிக்கு திருப்பினார். எதிர்தரப்பில் பாரப்பட்டி சுரேஷ், ராஜா ஆதரவாளர்களை சமாதனம் செய்து வண்டிக்கு திருப்பினார்’ என்கின்றனர்.
பின்னர் கோட்டை மைதானத்தை பார்வையிட சென்றனர் நிர்வாகிகள். விஷயம் அறிந்து அங்கே தி.மு.கவின் இரு அணியின் ஆதரவாளர்களும் குவிய பதட்ட பரபரப்பை அங்கு உண்டாக்கியது. இரண்டாம் நாளாகவும் ஆதரவாளர்கள் குவியல் குவியலாக குவிய பதட்ட சூழலாகவே உள்ளது சேலம்.
“சேலம் கூட்டத்திற்கு பிறகு இருதரப்பையும் சென்னையில் அழைத்து பேசுகிறேன். எனவே இந்த சண்டையை இத்தோடு மறந்துவிட்டு சேலம் பொதுக்கூட்டம் நடக்கும் வேலைகளை பாருங்கள். எந்த அசம்பாவிதங்களும் அரங்கேறிவிட கூடாது” என மு.க.ஸ்டாலின், வீரபாண்டி ராஜா, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன், எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோருக்கு செல்பேசி மூலம் எச்சரித்து அறிவிறுத்தியுள்ளார் என்று தெரிவித்தனர்.

இருந்தாலும் அணி அரசியலால் மு.க.ஸ்டாலின் சேலம் விசிட் டென்சன் நிறைந்ததாகவே உள்ளது.

ad

ad