புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜன., 2014

வடக்கு கிழக்கில் குடிகொண்டுள்ள இராணுவத்தினரையும் ஆயுதக் குழுவினரையும் மத்திய அரசு வெளியேற்றவேண்டும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் அதி­க­ளவில் குடி­கொண்­டுள்ள இரா­ணு­வத்­தி­ன­ரையும் மக்­களை அச்­சு­றுத்தி வரும் ஆயுதக் குழு­வி­ன­ரையும் வெளி­யேற்றி வடக்கு, கிழக்கு தமிழ் மக்­க­ளுக்கு அச்­ச­மில்­லாத ஒரு வாழ்வை
மத்­திய அர­சாங்கம் ஏற்­ப­டுத்திக் கொடுக்க வேண்டும். அத்­துடன் காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பிலும் அக்­க­றை­யுடன் அர­சாங்கம் செயற்­பட வேண்டும் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் தெரி­வித்தார்.
ஆத­ர­வற்ற சிறு­வர்­களைக் காப்­பாற்றும் அமைப்­பினால் அமைக்­கப்­பட்ட சிறுவர் கிராமம் நேற்று மாலை யாழ்ப்­பாணம் நாயன்­மார்­கட்டில் சிறுவர், பெண்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் திஸ்ஸ கர­லி­யத்­த­வினால் திறந்­து­வைக்­கப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,
மத்­திய, மாகாண அர­சாங்­கங்­க­ளி­டையில் புரிந்­து­ணர்வும் கூட்­டு­றவும் நில­வி­னால்தான் நாடு முன்­னேறும். மக்கள் நலம் பெறு­வார்கள். மத்­திய அர­சாங்­கத்­திற்கு சில அதி­கா­ரங்­க­ளையும் கட­மை­க­ளையும் சட்டம் விதித்­தி­ருப்­பது போல மாகாண அர­சு­க­ளுக்கும் சில அதி­கா­ரங்கள், வரம்­புகள், கடப்­பா­டுகள் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் அவை போதாது என்­ப­தற்கு 13ஆவது திருத்தச் சட்­டத்தின் குறை­பா­டு­களும் அதி­கா­ரத்தில் இருப்­ப­வர்­களின் அசட்­டை­களும் கார­ண­மென்று கூறலாம். மாகாண அதி­கா­ரங்­களை விரி­வு­ப­டுத்த மத்­திய அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். முக்­கி­ய­மாக இந்­நாட்டின் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் மாகாண சபை­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் அதி­கா­ரங்கள் முற்­றிலும் விரி­வு­ப­டுத்­தப்­பட வேண்டும். இரண்­டா­வ­தாக புதி­ய­தொரு அர­சியல் யாப்பு தயா­ரிக்­கப்­பட்டு ஒற்­றை­யாட்சி முறை கைவி­டப்­பட வேண்டும்.
ஒரே தேசம் ஒரே மக்கள் என்­றெல்லாம் மேடைக்கு மேடை கூக்­குரல் எழுப்­பு­வதில் பய­னில்லை. ஏனென்றால் இது ஒரே தேச­மாக இருக்கும் அதே­நே­ரத்தில் வெவ்­வேறு பின்­பு­லங்­களைக் கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்து வரு­கின்­றார்கள் என்­பதை நாங்கள் மன­தில்­கொள்ள வேண்டும். ஒரே­நாட்டில் வாழ்­வதால் நாங்கள் ஒரே மக்­க­ளா­கி­விட முடி­யாது. நாம் யாவரும் ஒரு­நாட்டு மக்­களே என்று பெரு­வா­ரி­யான பெரும்­பான்­மை­யின மக்கள் கூறும்­போது ”இது சிங்­கள பௌத்த நாடு. எல்­லோரும் சிங்­கள பௌத்த பெரும்­பான்­மை­யி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ­டங்­கிய இந்­நாட்டின் குடி­மக்­களே” என்ற அடிப்­படை எண்­ணத்­தில்தான் தமது கருத்தை வெளி­யி­டு­கின்­றார்கள். இது தவறு என்று அவர்கள் எண்­ணு­வ­தில்லை. இதன்­மூலம் எமது குழந்­தை­க­ளுக்கும் தவ­றான சரித்­திரக் கருத்­துக்­களைக் கொடுத்து வரு­கின்றோம் என்றும் நாம் சிந்­திப்­ப­தில்லை. இன்று சரித்­திரம் மாற்­றி­ய­மைக்­கப்­பட்டு தவ­றான சிந்­த­னைகள் அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகப் பரப்­பப்­பட்டு வரு­கின்­றன.
இலங்கைத் தீவின் மற்­றைய சிறு­பான்­மை­யினர் போலல்­லாது தமி­ழர்கள் சிங்­கள மக்கள் போல் நாட்டின் பெரும்­பான்மை இனத்­த­வர்­களே. ஆகவே அவர்­களைச் சிறு­பான்­மை­யி­ன­ராகக் கரு­தவோ சிறு­பான்­மை­யி­ன­ருக்­கு­ரிய சலு­கை­களை அவர்­க­ளுக்கு வழங்­கவோ தேவை­யில்லை என்­றார்கள். அதா­வது தமிழ் மக்கள் இந்­நாட்டின் சிறு­பான்­மை­யினர் எனக் கரு­தப்­பட்­டாமல் கால­தி­கா­ல­மாக வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்ந்து வந்­தி­ருந்­தார்கள் என்ற உண்­மையை அவர்கள் நூறு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே கூறி­யி­ருந்­தார்கள். இப்­பொ­ழுது வடக்கில் வளரும் ஒவ்­வொரு அரச மரத்­தையும் சங்­க­மித்தை அல்­லது மகிந்தன் கால அர­ச­ம­ர­மென்றும் இரா­வணன் சிங்­கள இனத்­தவர் என்றும் புதிய சரித்­திரம் வகுக்­கப்­பட்டு வரு­கி­றது. கிறிஸ்­து­வுக்குப் பின்­னர்தான் சிங்­கள மொழி நடை­மு­றைக்கு வந்­தது. இரா­வணன் சரித்­திர காலத்­திற்கு முன்னர் வாழ்ந்­தவர். உண்­மைக்குப் புறம்­பான இந்தப் புதிய சரித்­திரம் சிறுவர் சிறு­மியர் மத்­தியில் விதைக்­கப்­பட்டால் இனக் கிளர்ச்­சிக்கே அது வித்­திடும்.
போரா­னது பல குடும்ப அங்­கத்­த­வர்­களைச் சித­றுண்டு செல்ல வழி­கோ­லி­யது. தாய் ஓரிடம் தந்தை இன்­னோ­ரிடம் குழந்­தைகள் வெவ்­வேறு இடங்­களில் வளர வேண்­டிய சூழ்­நிலை. மீண்டும் அவர்­களைச் சேர்த்து வைத்து சித­றுண்ட குடும்ப வாழ்க்­கைக்குப் புத்­துயிர் அளிக்கும் இத்­திட்டம் பாராட்­டப்­பட வேண்­டிய ஒரு திட்டம். ஆனால் பல குடும்­பங்­களில் புதி­ய­தொரு அங்­கத்­தவர் அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். அவர்தான் காணா­மல்­போன நபர். அவர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்­லையா என்று கூற­மு­டி­யாத ஒரு இரண்­டுங்­கெட்டான் நிலை­யில்தான் அவரின் குடும்­பத்­த­வர்கள் வாழ்­கின்­றார்கள். அவர்­களை உயி­ருடன் கூட்டிச் சென்­றதைக் கண்­கூ­டாகப் பார்த்த அவரின் உற்றார் உற­வினர் அவர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று அறி­யாது தவிக்­கின்­றார்கள்.
எங்கே தமது காணா­த­வர்­களைக் காண எத்­த­னித்து அவர்கள் உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டு­வி­டுமோ என்ற பயம் அவர்­களை வாட்டி வதைக்­கின்­றது. காணா­மல்­போ­னவர் குறிப்­பிட்ட இடத்தில் இருக்­கின்றார் என்­பதை அறிந்து கொண்­டால்தான் கூட அதைத் தமக்குத் தெரியும் என்று வெளிப்­ப­டை­யாகக் கூறினால் எங்கே அவர்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்டு விடு­வார்­களோ என்ற பயத்தில் தமது எண்­ணங்­களை வெளி­யிடத் தயங்கி வாழ்ந்து வரு­கின்­றார்கள்.

ad

ad