ஆம் ஆத்மி ஆட்சி பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்துடெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்திருப்பது பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் பரபரப்பு கருத்தை வெளியிட்டுள்ளார். இன்று 48வது பிறந்த நாள் கொண்டாடும் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’உள்ளத்திலிருந்து ஒலிக்கும் நிஜ குரலை கேட்க
வேண்டும். இத்தனை புகழ் பெற்றும் அடக்கமாக இருப்பது பற்றி கேட்கிறீர்கள்.
நான் தேர்ந்தெடுத்துள்ள பாதை என்னை அப்படி இருக்க செய்கிறது. சர்ச்சைகளில் சிக்காமல் இருப்பதற்கு நான் எனக்காக வகுத்துள்ள கொள்கைகளே காரணம்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருப்பது பற்றி கேட்கிறீர்கள். இந்திய மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். இனி யாரும் அவர்களை ஏமாற்ற முடியாது. ஜெய்ஹிந்த்’’என்று கூறனார்.