புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 பிப்., 2014

    தெலங்கானா மசோதா நிறைவேறியது

தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேறியது, இந்த மசோதாவிற்கு  ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. சீமந்த்ரா பகுதி மக்களின் கவலையை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

மக்களவை கூடியதும்  உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்தார். இந்நிலையில் தெலங்கானா தனி மாநிலத்தை உருவாக்குவதற்கு சீமந்த்ரா பகுதியினர் எதிர்ப்பும், தெலங்கான பகுதியினர் ஆதரவும் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அதிலும் தெலங்கானா மசோதாவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள கூடாது என்று கூறி அவையின் மையப்பகுதிவரை வந்த சீமாந்த்ரா எம்.பிக்கள் ஆவேச முழக்கமிட்டனர். இதனால் அவையில் கூச்சம் குழப்பம் ஏற்பட்டது .
இதனால் சபை  பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.   அவையில் தொடர்ந்து அமளி நிலவியதால் மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் ராஜிவ் சுக்லா, மக்களவையில் பிற்பகல் 2.30 மணிக்கு தெலங்கானா மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார். பிற்பகல் 3 மணிக்கு அவை கூடியதும் தெலங்கான மசோதா 3திருத்தங்களுடன் மக்களைவில் நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன.

ad

ad