புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

எனது தந்தையார் விட்டுச்சென்ற பணியை முன்கொண்டு செல்வேன்

ஆக்ரோஷத்திலிருந்து என்னை விடுவித்தவர் ஜனாதிபதி 
எனது தந்தையார் மக்களுக்காக நிறைவேற்ற திட்டமிட்ட வேலைத் திட்டங்களை முன் கொண்டு செல்ல வேண் டும்.
இதற்காகவே நான் அரசியலுக்கு வந்தேன்.
ஆக்ரோஷத்தில் இருந்து என்னை விடு வித்து, சரியான பாதையில் கொண்டு சென்றவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களே, மத்திய கொழும்பு ஸ்ரீ. ல. சு. கட்சி இணை அமைப்பாளர் ஹிருனிகா பிரேமச்சந்திர இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பு மாவட்ட ஸ்ரீல. சு. கட்சி
செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்று எதிர்க் கட்சிக்கு கூறுவதற்கு ஒன்றும் இல்லை. அதனால் அவர்கள் ஜனாதிபதிக்கும், அரசுக்கும் சேறு பூசப்பார்க்கின்றனர்.
ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து தவறான அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
அபிவிருத்தியைச் சீர்குலைக்கவும், இனவாதத்தைக் கிளப்பவும் இவர்கள் செயற்படுகின்றனர்.
எனது தந்தை பிரச்சினைகளை மனிதப் பார்வையிலேயே நோக்கினார்.
அவர் குறுகிய அரசியல் அபிப்பிராயங் களைக் கருத்திற்கொள்ளவில்லை. அவரின் பணிகளைத் தொடர்வதே எனது பொறுப்பாகும். ஜனாதிபதியின் பெயர் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்.
பயங்கரவாதத்தில் இருந்து நாட்டைமீட்டு அபிவிருத்தியை அவர் உருவாக்கினார் என்றும் அவர் கூறினார்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைவர் லலித் பியும் பெரேரா பேசுகையில்:
ஹிருனிகா கொழும்பில் வெற்றி பெறுவது நிச்சயம்.
அவரைச் சுற்றி ஆயிரக் கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் அணிதிரண்டுள்ளனர் என்றார்.
நாமல் ராஜபக்ஷ எம்.பியின் இணைப்புச் செயலாளர் நிமல் விஜேசேகரா பேசுகையில் :
கொலன்னாவையில் மட்டுமல்ல ஹம்பாந்தோட்டை உட்பட முழு நாட்டிலும் அவர் பிரசித்தமாகி உள்ளார். அவருக்கு சகலரும் ஆதரவளிப்பர் என்றார். ஊடகவியலாளர் சீலரத்ன செனரத் பேசுகையில்:
ஸ்ரீல. சு. கட்சியின் ஒளிமயமான யுகம் மஹிந்த ராஜபக்ஷ யுகமாகும். அன்று தமிழ், முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு ஸ்ரீல. சு. கட்சிக்கு சொந்பமே கிடைத்தது.
அந்த நிலை இன்று மாறியுள்ளது.
இன்று ஜனாதிபதி ஒரு சர்வதேச தலைவராவார். அவரின் தலைமைத்துவத்தை உலகம் ஏற்றுள்ளது என்றார்.
ஸ்ரீல. சு. கட்சி தலைமையகத்தின் சார்பில் பொதேஜோ, லலித் உதேஷ, நிஹால் மாயாதுன்ன உட்பட பலர் உரையாற்றினர்.
தேர்தலுக்கான நடவடிக்கை குழுவும் நியமிக்கப்பட்டது. கொழும்பு மாவட்டத்தின் 15 தொகுதிகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். 

ad

ad