புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

    இருபது ஓவர் தொடரும் ஆஸ்திரேலியா வசம்

சிட்னியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3-வது இருபது ஓவர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஜார்ஜ் பெய்லி 20 பந்துகளில் 49 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று
3-0 என தொடரையும் வென்றது.
ஆஸ்திரேலியா சென்று 103 நாள்கள் தங்கி இருந்த இங்கிலாந்து அணி 5-0 என ஆஷஸ் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. 4-1 என ஒருநாள் தொடரையும் பறி கொடுத்தது. இருபது ஓவர் தொடரையும் 2-0 என ஆஸ்திரேலிய அணிய ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் கடைசி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கேம்ரூன் வொயிட் 37 பந்துகளில் 41 ரன்களும், ஆரோன் ஃபின்ச் 21 பந்தில் 30 ரன்களும் அடித்தனர். கடைசி கட்டத்தில் பெய்லி வெளுத்து வாங்கினார். அவர் கடைசி ஓவரில் 2 சிக்ஸர் 3 பவுண்டரி விரட்டினார்.
சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 17.2 ஓவரில் 111 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக மோர்கன் 34 ரன்கள் மட்டும் எடுத்து ஆறுதல் அளித்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பெய்லி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
கோப்பையுடன் ஆஸ்திரேலிய அணியினர்.

ad

ad