புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

அதிரடிப்படையினருடன் ஆயுதக்குழு மோதல் தப்பியோடியோர் மீது பதில் தாக்குதல்.இருவர் பலி

ஆயுதங்களும் மீட்பு திக்வெல்லையில் சம்பவம்
பொலிஸ் விசேட அதிரடிப்படையின ருக்கும் பாதாள உலக ஆயுதக் குழுவொன்றுக்குமிடையில் நடந்த மோதலில் படையினரின் பதில் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் திக்வல்ல ரத்மலே பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேட அதிரடிப் படையின் துப்பாக்கிச் சூட்டில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபரான மினுவங் கொடை பிரதேசத்தைச் சேர்ந்த கடுபிடியகே ஜீவன் சுனிமல் ரணசிங்க என்பவரும் அவருக்கு உதவியாக செயற்பட்ட திக்வல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நவீன் பிரதீப் என்பவருமே உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-
குற்றச் செயல்கள் தொடர்பில் நீதிமன்ற பிடியாணை விதிக்கப்பட்ட சந்தேக நபர் ஒருவர் திக்வல்ல பகுதியில் இரவு நேரத்தில் முச்சக்கர வண்டியில் நடமாடுவதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனை அடுத்து நள்ளிரவு 12.00 மணியளவில் குறத்த பிரதேசத்தில் சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்ட அதிரடிப் படையினர் வேகமாக வந்த முச்சக்கர வண்டியை இரண்டு தடவைகள் நிறுத்தியுள்ளனர். எனினும் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியை நிறுத்தாமல் வேகமாக சென்றுள்ளனர். இதனை அடுத்து அதிரடிப்படையினர் முச்சக்கர வண்டியை துரத்திச் சென்றுள்ளனர்.
வேகமாக சென்ற முச்சக்கர வண்டி எதிர்பாராத விதத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது. உடனடியாக அதிலிருந்த இரு சந்தேக நபர்கள் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வண்ணம் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர். இதன்போது அதிரடிப் படையினர் பதில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் அந்த இடத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து மைக்ரோ ரக துப்பாக்கி ஒன்றையும் வெடிக்க தயார் நிலையில் இருந்த கைக்குண்டு ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது சந்தேக நபரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இரு பொலிஸார் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் கொல்லப்பட்ட மினுவங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இவர் பல்வேறு குற்றச் செயல்கள், கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்களென தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், மற்றைய சந்தேக நபரின் திக்வல்ல வீட்டிலிருந்து நவீன ரக துப்பாக்கி மீட்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

ad

ad