புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

ஆம் ஆத்மி அரசுக்கு பின்னி 48 மணி நேர கெடு

தில்லி அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற 48 மணி நேர கெடு விதித்து ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. கெடு விதித்துள்ளார். மேலும் அக்கட்சியைச் சேர்ந்த 5 எம்.எல்.ஏ.க்களை திங்கள்கிழமை
(பிப். 3) அணிவகுப்பதாக அவர் கூறினார்.
28 எம்எல்ஏக்கள் சிறுபான்மை பலத்துடன் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், ஒரு சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் தில்லியில் "ஆம் ஆத்மி' அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில், கட்சித் தலைமைக்கு எதிராக கருத்து வெளியிட்ட லக்ஷ்மி நகர் தொகுதி எம்எல்ஏ வினோத் குமார் பின்னியை "ஆம் ஆத்மி' மேலிடம் அண்மையில் கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் 27 ஆக அதன் பலம் குறைந்தது.
இந்நிலையில், புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவருடன் ஐக்கிய ஜனதா தள உறுப்பினர் ஷோயிப் இக்பால், முண்ட்கா தொகுதி சுயேச்சை உறுப்பினர் ராம்பிர் சோகீன் ஆகியோர் இருந்தனர். தனித்து செயல்பட்டுவரும் பின்னிக்கு "ஆம் ஆத்மி அரசுக்கு வெளியில் இருந்து இவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
செய்தியாளர் சந்திப்பின்போது பின்னி கூறியது:
"தில்லியில் எதேச்சதிகார போக்குடன் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் ஆட்சி நடத்தி வருகிறார். தேர்தலையொட்டி வாக்காளர்களை ஈர்க்க கவர்ச்சிகர அறிவிப்புகளையும் சலுகைத் திட்டங்களையும் வெளியிட்டார். ஆனால், எதையும் முழு ஈடுபாட்டுடன் அவர் நிறைவேற்றவில்லை. நல்லது செய்வார் என்று மக்கள் நம்பிக்கையுடன் "ஆம் ஆத்மி' கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர். இருந்தபோதும் 28 இடங்களில் மட்டும் அக்கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் காங்கிரஸின் 8 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததால் தில்லியில் ஆம் ஆத்மியால் ஆட்சிக்கு வர முடிந்தது. "ஆம் ஆத்மி' அரசின் நிறை, குறைகளை மக்கள் சுட்டிக்காட்டலாம் என்று கேஜரிவால் முன்பு கூறினார். அந்த அடிப்படையில் மக்கள் பிரதிநிதியாக அவர் நிறைவேற்றத் தவறிய திட்டங்களை சுட்டிக்காட்டினேன். அதற்காக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளேன்.
மேலும் 5 எம்.எல்.ஏ.க்கள்: சர்வாதிகார, அராஜக போக்குடன் அவர் நடத்திவரும் ஆட்சிக்கு மக்களிடமும் இப்போது ஆதரவு இல்லை. முதல்வர் கேஜரிவாலுக்கு எதிராக மேலும் ஐந்து உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறத் தீர்மானித்துள்ளனர். நாங்கள் அனைவரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 2) தில்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கவுள்ளோம்.
தேர்தலையொட்டி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கேஜரிவால் அரசுக்கு 48 மணிநேர கெடு விதிக்கிறோம்' என்று பின்னி கூறினார்.

ad

ad