புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

சிறிலங்கா விவகாரம்:ஜெனிவாவில் இந்தியத் தூதுவருடன் பேசுகிறார் நிஷா

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து, ஜெனிவாவில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடவுள்ளதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா பயணத்தின் முடிவில், கொழும்பில் நேற்றுமுன்தினம் மாலை செய்தியாளர்களை சந்தித்திருந்தார் நிஷா பிஸ்வால்.

இதன் போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் முக்கியமான நாடான இந்தியாவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்த நிஷா பிஸ்வால்,ஜெனிவாவில் உள்ள இந்தியத் தூதுவரைச் சந்திக்கும் வாய்ப்பை தாம் கோரவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பயணத்தை முடித்துக் கொண்டு, லண்டன் சென்றுள்ள நிஷா பிஸ்வால், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் குறித்து பேச்சுக்களை நடத்துவதற்காக ஜெனிவா செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad