புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

 தற்போதுள்ள சமாதானம் தொடர வேண்டும்; நேபாள இராணுவ அதிகாரி யாழில் தெரிவிப்பு 
யுத்தம் நிறைவடைந்த பின்னர் பாரிய அபிவிருத்தி நாட்டில் ஏற்பட்டுள்ளது எனவே மேலும் அபிவிருத்திகள் ஏற்பட தற்போதேய சமாதானம் தொடர்ந்தும் நிலைக்க வேண்டும் என நேபாள நாட்டு இராணுவ உயரதிகாரி
ஜங் பஹதூர்ரணா தெரிவித்தார்.

நட்பு ரீதியிலான விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ உயரதிகாரி இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து மாவட்ட இராணுவ கட்டளை தளபதி உதய பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்போது யுத்தத்திற்குப் பின்னர் நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதை அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த 2002 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன்முதலில் விஜயம் மேற்கொண்டிருந்தேன். இது என 2ஆவது விஜயம். ஆயினும் யாழ்ப்பாணத்தின் முதன்முறையாக இன்று வந்துள்ளேன்.

எனினும் நான் முதல்தடவை இலங்கைக்கு வருகை தந்த போது இருந்த அபிவிருத்தியை விட யுத்தம் முடிந்த பின்னர் பாரிய அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் வீதிகள் என்பன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

மேலும் யுத்தத்தினால் இரத்தம் சிந்தும் நிலை தற்போது இல்லாது சுமாகமான நிலை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர வேண்டும் என்றார்.

சந்திப்பினையடுத்து நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சென்று பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.அவருடன் அவரது பாரியார் ரோகினி ரணா மற்றும் நேபாளத்தை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நல்லூர் வழிபாட்டினை முடித்துக் கொண்டு யாழ். கோட்டை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் சென்று பார்வையிட்டனர்.



















ad

ad