புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 பிப்., 2014

வடமாகாணசபைத் தீர்மானங்களுக்கு சிறிலங்கா அதிபரே பொறுப்பு – முதல்வர் விக்னேஸ்வரன் குற்றச்சாட்டு

போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணை கோரி வடக்கு மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவே காரணம் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 

வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கோரியதை, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிறைவேற்றியிருந்தால், இத்தகைய தீர்மானம் கொண்டு வருவதைத் தவிர்த்திருந்திருக்க கூடும்.

எமது உறுப்பினர்களின் உணர்வுகளின் விளைவுகளே தீர்மானங்கள். இதற்கு ஒரே காரணம் சிறிலங்கா அதிபர் தான்.

சட்டத்தின்படி, முதலமைச்சருடன் கலந்தாலோசித்தே, மாகாணசபையின் தலைமைச் செயலரை சிறிலங்கா அதிபர் நியமிக்க வேண்டும்.

நாம் வருவதற்கு முன்னர், ஆளுனராலும், அமைச்சர் றிசாத் பதியுதீனாலும், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டவரை, மாற்றுவதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

என்மீது சவாரி செய்யலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இதனால், நான் ஒருவரை இலகுவாக நம்பி விடுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

தலைமைச்செயலரை மாற்ற சிறிலங்கா அதிபர் இடமளித்திருந்தால், தீர்மானங்களைக் கொண்டு வருவதில் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு, உறுப்பினர்களை என்னால் தடுத்திருக்க முடியும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ad

ad