நகர மைய வீதிகளை காப்பெற் வீதிகளாக்க 100 மில்லியன்; முதல்வர் அறிவிப்பு
யாழ்.மாநகர சபைக்கான மாதாந்தக் கூட்டம் மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் நடபெற்று வருகின்றது. அதன்போதே முதல்வர் இதனைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட வீதிகள் நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாது உள்ளதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டன. அதனையடுத்து அமைச்சர் டக்களஸ் தேவானந்தாவின் ஊடாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்படி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச யாழ். நகர மைய வீதிகள் அனைத்தும் மிகவிரைவில் காப்பெற் வீதிகளாக மாற்றப்படுவதற்கு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார்.
எனவே மிகவிரைவில் நகர மைய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
யாழ். நகர மத்திய வீதிகள் அனைத்தும் காப்பெற் வீதிகளாக மாற்றப்படவுள்ளன. இதற்காக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு 100 மில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளது என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.