புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2014


















முள்ளிவாய்க்கால் அஞ்சலிக்கு மறுப்பு; எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு 
இறுதிக்கட்ட யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேரணையினை ஏற்க மறுத்ததால் சபை கூட்டத்தில் இருந்து எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்துள்ளது.


மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் இன்று முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் நடைபெற்று வருகின்றது. அதன்போது எதிரிக்கட்சியினர் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பிரேணையினைக் கொண்டு வந்தனர்.

எனினும் முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு மட்டும் சபையில் அஞ்சலி  செலுத்த முடியாது. 1983ஆம் ஆண்டுக்கு பின்னர் கொல்லப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதானால் சபையில் அஞ்சலி செலுத்தலாம் என முதல்வர் அறிவித்தார். ஆளும்கட்சியினரும் அதற்கு ஆதரவு வழங்கினர்.

இருப்பினும் 1983ஆம் ஆண்டு முதல் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செய்வது என்றால் துரோகிகளுக்கும் நாம் அஞ்சலி செலுத்த வேண்டும் எனவே அவ்வாறு எங்களால் அஞ்சலி செலுத்த முடியாது .இன்று முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று வாதிட்டனர்.

இதற்கு  அனுமதி வழங்காதவிடத்து எதிர்க்கட்சியினர் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து எதிர்க்கட்சியின்றி இன்று கூட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




ad

ad