புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 மே, 2014


விமல் - சம்பிக்க ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படலாம்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மற்றும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஆளும் கட்சியிலிருந்து வெளியேற்றப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரண்டு அமைச்சர்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் மஹிந்த ராஜபக்சவிடம் கோரியுள்ளனர்.
விமல் மற்றும் சம்பிக்க ஆகியோர் ஆளும் கட்சியில் உட்பூசல்களை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆளும் கட்சிக்குள் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்து வரும் இருவரும் எதிர்காலத்தில் அரசாங்கத்திலிருந்து நீக்கப்படலாம் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இரண்டு அமைச்சர்களின் நடவடிக்கைகள் ஏனைய அமைச்சர்களின் நடவடிக்கைகளை பெரிதும் பாதித்துள்ளதாக பெயர் குறிப்பிட விரும்பாத அமைச்சர் ஒருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறித்த இரண்டு அமைச்சர்களின் விமர்சனங்களில் அரசாங்கத்தின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆளும் கட்சியின் ஒழுக்கம் தொடர்பில் கேள்வி எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பிக்க மற்றும் விமல் ஆகியோர் தொடர்பில் ஜனாதிபதியுடன் சுதந்திரக் கட்சி சிரேஸ்ட உறுப்பினர்கள் பேசவுள்ளதாகவும், ஏற்கனவே இது குறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ad

ad